பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 337 பெரும்பான்மையும் அவர்கள் மீளவும் ஞானம் பெறுவதற்கு வாய்ப்பான நல்ல சூழ்நிலையிற் பிறந்து தவத்தை முற்றச் செய்து ஆசான் மூர்த்தி அருளால் ஞானத்தைப் பெற்றுப் பின் அபர பரமுத்திகளை அடைவர் என்பது அறியப்படும். நிவிர்த்தி கலை, பிரதிட்டா கலையுட்பெறும் பதமுத்தி யாளர்க்கே சீகண்ட உருத்திரர் பதியாய் நிற்பர் என்பதை நாம் அறிவோம். மேன்மேல் உள்ள தத்துவங்கள் கீழ்கீழ் உள்ள தத்துவங் களிலும் வியாபகமாதலின் நிவிர்த்தி பிரதிட்டை என்னும் கலைகளிலும் பரமுத்தி அபரமுத்தி தானங்கள் உளவாதலும் அறிந்து தெளியலாம். (vii) சிவக்குமாரர்கள் இவர்கள் விநாயகக் கடவுள், முருகக் கடவுள், வயிரவக்கடவுள், வீரபத்திரக் கடவுள் என்ட வராவர். இவர்களும் நிவிர்த்தி பிரதிட்டா கலைகளில் பதச் சாயுச்சியம் பெற்றவர்களாவர், அதனால் இவர்களை வழிபடு வோர் இவர்பால் சாலோகம் முதலியவற்றைப் பெறுவர் என்பத னையும் அறியலாம். பதமுத்திகளில் சாயுச்சியம் பெற்றோரை அபரமுத்தர் என வழங்குதலும் உண்டு. இவர்தம் விருப்பத்தின் வழியும் புவனபதிகளின் விருப்பத்தின்வழியும் Lಖ ೧೧5LIST உருவங்களையும் பெற்றிருப்பர். .

  • உண்மைச் சரியை முதலியவற்றிற்கு ஞானமும் ஞானத் திற் சரியை முதலியவற்றிற்கு ஞானத்தித்தில் ஞானமுமே உண்மைப் பயனாயினும் இவை இடைநிலைப் பயனாக முறையே பதமுத்தியையும் அபரமுத்தியையும் தரும் என்பதும் ஈண்டு அறிந்து தெளியப்படும்.