பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 343 யும் காணலாம். இதன் பயனாகவே திருமந்திரம், சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற தத்துவநூல்கள் உலகிற்குக் கிடைத்தன என்பதை எண்ணி மகிழலாம். இவ்வியல்புடையவரே உலகிற்கு நல்வழி காட்டுதற்கு உரியர் என்பதை விளக்கும் பொருட்டுத்தான் நீத்தார் பெருமை’ என்ற ஓர் அதிகாரத்தைத் தமது நூலில் பாயிரப் பகுதியில் வைத்துள்ளார் வள்ளுவப் பெருந்தகை என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆகவே, சீவன்முத்தருக்கு அவரது அறிவு இச்சைச் செயல்கள் ஒவ்வொரு பொழுது புறத்தே செல்லு மாயின் அப்பொழுதும் இந்நிலையில் அவை நிகழ்தலன்றி வேறுவகையில் நிகழமாட்டா என்பதைக் கருத்தில் இருத்துதல் வேண்டும். பிராரத்தம் காரணத்தால் உடலுக்கு இன்பம் வரினும் துன்பம் வரினும் இன்பத்தில் மகிழ்தலும் இல்லை; துன்பத்தில் வருந்துதலும் இல்லை. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்?" என்ற வள்ளுவர் வாக்கை நன்கு அறிந்து தெளிந்தவர்கள் இவர்கள். இந்த இரு திறத்திலும் ஒரு தன்மையாய் இறைவன் திருவடிநிழலில் அகலாது நிற்பர் என்பது ஈண்டு அறிந்து தெளியப்படும். “பாச ஞானத்தால் பரனைத் தரிசித்தோம் பரமே பார்த்திருப்பர், பதார்த்தங்கள் பாரார்' என்று சிவஞான சித்தியார் கூறுவது இச் சீவன் முத்தி நிலையையே என்பது உளங்கொள்ளத் தக்கது. இந்த நிட்டைநிலையை அடைந்தோர்க்கும் பரமுத் தியை எய்தினோர்க்கும் உள்ள வேறுபாடு இதுதான். முன்ன 45. குறள் 379(ஊழ்) 46. திருவருட்பயன் 10.9