பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் வர்க்கு உடம்பு இருத்தலும் பின்னவர்க்கு அஃது இல்லாமை யாகும். ஆகவே பரமுத்தி அடைந்தோர் உடம்பைத் துறந்து பெறும் இன்பத்தைச் சீவன்முத்தர் உடம்போடு பெறுகின்றனர். ஆகவே, உடம்பு நீங்கியவுடன் நேரே சாயுச்சியமாகிய பரமுத்தியைப் பெறுவர். அதனால் இவர்களைச் சித்தியார், எண்ணும் இகலோகத்தே முத்திபெறும் இவன்றான் எங்கெழில்என் ஞாயிரெமக் என்றுகுறை வின்றிக் கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம் - கழிந்தக்கால் எங்குமாய்க் கருதீன்போல் நிற்பன்' என்று கூறும். கொற்றவன்குடி உமாபதி சிவமும், மூதறிவார்க்கு-அம்மையும் இம்மையே யாம்." என்று விளக்குவர். இந்த இரு கூற்றுகளாலும் பரமுத்தியை அடைந்தோர் உடம்பு நீங்கிப்பெறும் இன்பத்தைச் சீவன்முத்தர் உடம்பொடு நின்றே பெறுகின்றனர் என்பது தெளிவு. இதனால் இவர்கள் உடம்பு நீங்கியவுடன் சிவசாயச்சியமாகிய பரமுத் தியைப் பெறுதலன்றி வேறில்லை என்பதும் உணரப்படும். சீவன் முத்தரைத் தமிழில் அணைந்தோர்’ என்று வழங்குவர். ஒரு முக்கிய செய்தி: குருவருளால் ஞானம் கைவரப் பெற்றோர் அனைவரும் சீவன்முத்தர் நிலையை அடைந்து விடமுடியாது. ஞானத்தின் படிநிலைகளே இதற்குக் காரணம். இப் படிநிலைகள் யாவை? இவை ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்பவையாம். இவை முறையே குரு உபதேசத்தின்வழி சிவமுதற் பொருளே ஏனைய எல்லாப் பொருட்கும் பற்றுக்கோடு எனக் கேட்டல், பின் அதனை நூல்களும் பொருந்துமாறு சிந்தித்தல், பின் அதுவே உண்மையென ஒரு 47. சித்தியார்.824 48. மேலது.11.2