பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 345 தலையாகத் துணிதல், பின் பிற பற்றுகள் அற்று அச்சிவத் தில் அழுந்துதல் என்பவையாகும். இவற்றுள் இறுதியில் குறிப்பிட்ட அழுந்துதல்’ என்னும் நிட்டை நிலையாகிய ‘ஞானத்தில் ஞானம்' என்னும் நிலையே சீவன் முத்தி நிலை யாகும் என்பதும் அறிந்து தெளியப்படும். உயிர்கள்தோறும் ஆணவமலப் பிணிப்பு ஒரு வகை யாக இல்லாமல் வெவ்வேறு வகையாய் இருக்கும் என்பதை நாம் அறிவோம். இதனால் அதன் பரிபாக நிலையையும், அதற் கேற்ப நிகழும் சத்தி நிபாதநிலையையும் பல்வேறு வகையாக இருக்கும் என்பதையும் நாம் தெரிந்துள்ளோம். ஆதலால் குருவருளால் ஞானத்தைக் கேட்டல் என்னும் அளவில் பெற்றவுடனே எல்லோர்க்கும் நிட்டை நிலையாகிய சீவன் முத்தி நிலை எளிதில் கைகூடுவதில்லை. அதன்பின் சிந்தித்தல் தெளிதல்களும் ஒருவகையாக நிகழ்வதில்லை; பல்வேறு வகைப்பட்ட மந்தமாகவும் தீவிரமாகவும் நிகழும். அதிதீவிரத் தில் தீவிரம்’ என்னும் நிலை வரும்போதுதான் நிட்டையிலே நிற்றலாகிய சீவன் முத்தி நிலை கூடுவதாகும். அதிதீவிரத் தில் அதிதீவிரமான தமது நிலையையே மணிவாசகப் பெருமான். விடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்." என்று குறிப்பிட்டதையும் எண்ணி ஒர்தல்வேண்டும், இந்நிலை பலர்க்கு இல்லாமையால்தான் பலர் குருவருளைப் பெற்ற பின்பும் சீவன் முத்தி நிலையை எய்த முடிவதில்லை. மணிவாசகப் பெருமானும் இந்நிலை தனக்கு வாய்க்க வில்லை என்பதை, 49. சித்தியார்-8.31 50. திருவா. திருச்சதகம் அறிவுறுத்தல்-1