பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 349 அறிதலின் பயன் அதனைவிட்டு நீங்காது அதன்கண் அழுந்தி இன்புறுதலேயாதலின் அது சுத்தி’ எனப்படுதல் இல்லை. என்பது தெளிவாக அறியப்பெறும், சிவம் தானும் தனது சக்தியும் என இரு கூறுபட்டு நிற்கும். ஆதலின் முதற்கண் சக்தியை அறிந்தே பின் சிவத்தை அறியும் நிலை உண்டாகும். இவற்றுள் சக்தியைத் தெளிவாக அறியும் நிலையே சிவயோகம்’ எனப்படும்; சிவத்தைத் தெளிவாக அறியும் நிலையே சிவபோகம்’ என்றும் நுவலப்படும்." தசகாரியம்-மேலும் விளக்கம்: மேலே குறிப்பாகச் சுட்டியதை சற்று விரிவாக விளக்குவோம்; சத்தி நிபாதத்து உத்தமனாகிய மாணாக்கனுக்கு ஞானோபதேசம் செய்து வரம்பில் இன்பத்தில் என்றும் ஒரு நிலையாய் இருத்தற் குரியதை விளக்குவார் ஞானாசிரியர். ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே.” என்பது சிவஞான போதம். இதில் விட்டு என்றும் செல்லும்’ என்றும் மெய்கண்டார் கூறும் இரு செயல்களே தசகாரியம்’ எனப்படுகின்றன. இவற்றுள் விடுதல் பாசக் கூட்டத்தையும் பசு போதத்தையும் ஆகும், செல்லுதல் சிவத்தினிடத்திலாகும். இவண் கூறிய உபதேசத்தைப் பெற்றோர் அனைவர்க் கும் விடுதலும் செல்லுதலும் ஒரு வகையாகவே நிகழ்தல் இல்லை; அவரவரது தன்மைக் கேற்ப மெல்லவும் விரையவும் 54. யோகம்’ என்பதற்கு ஒன்றுதல்’ என்பதும், போகம்’ என்பதற்குத் துய்த்தல்’ என்பதும் சொற்பொருள்களாகும். 55. சி.ஞா.போ.சூத்திரம் 8.