பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 35i இத்துணிபுணர்வு பிறந்தபின் உயிர் அச்சடப்பொருள்களை உவர்த்து அவற்றிலிருந்து நீங்குதற்கு இடைவெளி இன்மை யால் இது தத்துவ சுத்தியாவதற்குத் தடையின்மை அறிந்து தெளியலாம். (ஆ) ஆன்மருடம் முதலிய மூன்று: தத்துவங்களின் இயல்பை நூல்களில் நுவன்றவாறு அறிந்து கொள்வதுபோல் “தத்துவங்களோ அல்லது அவற்றின் கூட்டமோ ஆன்மா அல்ல, ஆன்மா வேறு" என்பதையும் அதன் இயல்புகளை யும் நூல்களில் கூறியவாறு அறிந்து கொள்ளுதலே ஆன்ம ரூபம் என்பது. அதன்பின் அவற்றைத் தன் அறிவிற்குப் பொருந்துமாறு ஆராய்தலே ஆன்ம தரிசனம் ஆகும். இவ்வாறு ஆராய்ந்தபொழுது ஆன்மா தத்துவங்கள்போல சடமாகாது சித்தே என்றாலும், பிறிதொன்றன் துணையின்றித் தனித்து நின்று அறிய இயலாது. ஆதலின் அதற்கு எஞ்ஞான்றும் துணையாய் உடன் நின்று உணர்த்திவருவது முதல்வன் திருவருளே என்பது இனிது விளங்கும். ஆதலின் அவ் விளக்கத்தின்வழித் தனக்கென ஒரு செயலுமின்றி, எல்லாம் முதல்வன் செயலாக உணர்ந்து தன் செயலற்று இருத்தல் ஆன்ம சுத்தி யாகும். இவ்வாற்றால் எந்த ஒன்றை யாயினும் “யான் செய்தேன்” அல்லது "பிறர் செய்தார்” என்று எண்ணுதலும், ஒன்றை “என்னுடையது, அல்லது பிறருடை யது” என்று எண்ணுதலும் ஆகிய "யான், எனது என்னும் செருக்கு" அற்றொழியுமாதலின் இதுவே ஆன்மகத்தியாதல் என்று அறிந்து தெளியலாம். . (இ) சிவ ரூபம் முதலிய நான்கு தத்துவங்களின் இயல்பு, ஆன்மாவின் இயல்பு இவற்றை நூல்களில் கூறியவாறே கொள்ளுதல்போல் சிவத்தினது பொது இயல்பு (தடத்த இலட்சணம்-உலகத்தை ஐந்தொழில் படுத்தல்), உண்மை இயல்பு (சொரூப இலட்சணம்-எண்குணம்