பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் உடைமை நூல்களில் சொல்லியவாறு அறிந்து கொள்ளுதல் சிவருபம் ஆகும். பின்னர் அவற்றைத் தன் அறிவிற்குப் பொருந்துமாறு ஆராய்தல் சிவதரிசனம். சிவத்தினது இயல்பு இவ்வாறு அறிவிற்கும் பொருத்தமாதல் தோன்றும் பொழுதே முன்னர்க் கூறிய 'யான், எனது” நிலைமை நிலைபெறுதலும் அதனால் எங்கும் சிவமாய்க் காணும் காட்சியும், அ. காட்சியால் சிவானந்த விளைவும் உண்டாகும். ஆகன்ே, இந்நிலையே சிவத்தை உண்மையில் கானும் சிவ தரிசனம் ஆதல் அறிந்து தெளியப்படும். சிவதரிசனம் வாய்த்தபொழுதும் பழைய வாசனை பற்றி “யான் செய்தேன்; பிறர் செய்தார்; என்னுடையது; பிறருடை யது" என்று எண்ணும் தற்போதம் அல்லது சீவபோதம் எழும். இதனை அச்சிவதரிசன முறையில் சிந்தித்து அடக்கித் தன் செயலற்றுச் சிவத்தில் ஒன்றி இருத்தலே சிவயோகம் ஆகும். இதுவே உண்மை யோகம். ஏனைய யோகம் பொது யோகமே என்பது அறிந்து தெளியப்படும். சிவயோகத்தில் ஆன்மா நிலைத்து நிற்கும்பொழுது சிவானந்தம் தோன்றும். ஆதலின் அதனை நுகர நுகர அஃது ஒரு காலைக்கொருகால் மிகுந்து பெருகி ஆன்ம அறிவைத் தன்னுள்ளே விழுங்கிக்கொள்ளும். யானாகிய என்னை விழுங்கிவெறும் தானாய் நிலைநின்றது. தற்பரமே” என்ற திருவாக்கில் குறிப்பிட்டுள்ளது இந்நிலையேயாகும். ஆன்ம போதம் அறவே மூழ்கடிக்கப் பெற்ற பின்னர், ஆன்மா தன்னையோ, பிறரையோ, பிற பொருள்களையோ உணரும் நிலை எப்படி இருக்கமுடியும்? ஆகவே, இந்நிலை யில் சொல் இல்லை; செயல் இல்லை; மனம் இல்லை, இரவு இல்லை; 56. கந்தரநுபூதி-28