பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 357 சொப்பனத்தில் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்தும் நீங்க. ஏனைய இருபத்தைந்தும் தொழிற்படும். கேவலசுழுத்தியில் அவ்விருவகை இந்திரியங் களாகிய சத்தம் முதலிய ஐந்தும், வசனம் முதலிய ஐந்தும், அந்தக்கரணங்களில் சித்தம் தவிர ஏனைய மூன்றும், வாயுக் களில் பிராணன் தவிர ஏனைய ஒன்பதும் ஆக இருபத் திரண்டு கருவிகள் நீங்க, சித்தம், பிராணன், புருடன் என்னும் மூன்று கருவிகளே செயற்படும். கேவலதுரியத்தில் சித்தம் நீங்க, மற்றைய இரண்டும் தொழிற்படும், கேவலதுரி யாதீதத்தில் பிராணனும் நீங்க புருடன் ஒன்றே நிற்கும். இவண் கூறிய கருவிகளில் குறைவனவாகவும், பின் கூடுவன வாகவும் உள்ள கருவிகள் ஆன்ம தத்துவ தாத்துவிகங்களே யாதல் அறியத்தக்கது. - - கேவல சாக்கிரம் முதலிய ஐந்திற்கும் முறையே புருவநடு, கண்டம் (கழுத்து), இதயம், உந்தி, மூலாதாரம் என்பனவாகும். எனவே, இவ்வவத்தைகளில் ஆன்மா முறையே இங்ங்னம் கீழிறங்கிச் சென்று மூலாதாரத்தை அடையும். பின்பு நீங்கிய கருவிகள் இம்முறையே வந்து கூட ஆன்மா மூலாதாரத்திலிருந்து மேற்கூறிய இடங்களில் மேல் ஏறிப் புருவ நடுவை அடையும். இதனால் கீழிறங்குதல் கீழால் அவத்தை’ என்றும்; மேலேறுதல் மேலால் அவத்தை' என்றும் வழங்கப்பெறும். இவ்விரண்டிலும் ஆன்மா கீழிறங்குதல், மேலேறுதல் என்பன தவிரப் பிறிதொரு வேறு பாடும் இல்லை. சகல சாக்கிரம் முதலிய ஐந்திற்கும் இடம் புருவநடு ஒன்றே. அதனால் அவை ஐந்தும் மத்தியால் அவத்தை' எனவழங்கப்பெறும். இவை ஐந்தும் பிரேரககாண்டமாகிய சுத்த தத்துவம் அல்லது சிவதத்துவம் எனப்படும் ஐந்தும்