பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் குறைதல் கூடுதல்களால் நிகழ்வனவாகும். சகல சாக்கிரத்தில் இவை ஐந்தும் தமக்குக் கீழ்உள்ள கருவிகளைச் செலுத்த லாகிய தம் தொழிலைப் புரிந்து நிற்கும். சகல சொப்பனம் முதலியவற்றில் சுத்த வித்தை தொடங்கிய ஒவ்வொன்றும் நீங்க, சகல துரியாதீதத்தில் சிவதத்துவம் ஒன்றே செயற்படும். பின்பு அது வந்து கூடும்பொழுது சாதாக்கியம் முதலாக முறையே வந்து கூடும். தத்துவங்கள் தோன்றும் முறைபற்றி முன்னர் கூறப் பெற்றது. அவை ஒடுங்கும் பொழுதும் அம்முறையிலேயே ஒடுங்கும். அதனால் அவற்றை எண்ணும் பொழுது அவை தோன்றும் முறையில் வைத்து எண்ணுதல் தோற்றமுறை" (உற்பத்திக்கிரமம்) என்றும், ஒடுங்கும் முறையில் வைத்து எண்ணுதல் ஒடுக்க முறை (சங்காரக்கிரமம்) என்றும் கூறப்பெறும். யோகாவத்தைகள் சுவாதிட்டானம் முதல் சகத்திரத் தளம் ஈறாகவுள்ள ஆதாரங்களும் சகத்திரத்தளத்திற்குமேல் பன்னிரண்டு அங்குலமான நிராதாரமும் அதற்கு அப்பாற் பட்ட மீதானமும் ஆகியவை பற்றி ஏற்ற பெற்றியால் நிகழும் சகத்திரத்தள இடத்தையே பலவாறாகக் கூறுதல் உண்டு. சுத்தாவத்தைகள் இங்ங்னம் உடம்பைப் பற்றி நிகழாது தற்போதம் அல்லது சீவபோதமாகிய ஆன்மபோதத்தைப் பற்றியும் சிவபோதமாகிய அருட்சக்தி பற்றியும் நிகழும் என்பதையும் அறிக. யோகாவத்தை, சுத்தாவத்தை என்பவை களையே மேலால் அவத்தை என்பாரும் உளர். உபாயநிட்டை மேற்கூறியவற்றால் சிவயோகமாகிய தெளிதலே சுத்த துரியம்’ என்பதும், சிவயோகமாகிய நிட்டையே சுத்த துரியாதீதம் என்பதும் தெளிவாகும். இனி நிட்டையாகிய அந்த அதீத நிலையை அடைந்தோர் அதன்