பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 36} உபதேச வாயிலாகவும், நூல்கள் வாயிலாகவும் பிறவாறாகவும் உண்மை ஞானத்தை அருளுவன். இஃது "உந்தி களிறு, உயர்போதம் சித்தியார்" முதலிய மெய்கண்ட நூல்களில் நன்கு விளக்கப்பெறுகின்றது. ஏகனும் ஆகி அனேகனும் ஆனவன் நாதனும் ஆனான்என் றுந்தீபற நம்மையே ஆண்டான்னன் றுந்தீபற. நம்செயல் அற்றறிந்த நாம்அற்ற பின்நாதன் தன்செயல் தானேஎன் றுந்தீபற தன்னையே தந்தென் றுந்தீபற." என்ற திருவியலூர்உய்யவந்த தேவநாயனாரின் அருளிச் செயல்களையும், ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை மாற்றிஅவ் வாற்றான் மறித்தாற்போல்-தோற்றிப் புலன்களெனப் போதம் புறம்மொழியின் நந்தம் மலங்கள் அற மாற்றுவிக்கும் வந்து.' என்ற திருக்கடவூர் உய்யவந்த நாயனாரின் அருள் மொழியையும், ‘இனி, இவ்வான்மாக்களுக்குத் தமதுமுதல் தானே குருவுமாய் உணர்த்தும் என்றது, அவன் அன்னிய மின்றிச் சைதன்ய சொரூபியாய் நிற்றலான்' என்ற மெய்கண்டாரின் திருவாக்கையும், ஞானயோ கக்கிரியா சரியை நான்கும் நாதன்றன் பணி; ஞானி நாலினுக்கும் е и е е в е а е в и உரியன். 66. திருவுந்தி-5.6 . 57. களிறு-11 சூத்திரம்-8 68. சி.ஞா.போ.அதி2