பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் ஆதலினால் யார்க்கும் ஈனமிலா ஞானகுருவே குருவும் இவனே." என்ற அருணந்தி தேவநாயனாரின் அமுதமொழியையும் கண்டு தெளியலாம். மேற்கண்டவற்றால் மெய்கண்டதேவர் முதலிய உபதேச பரம்பரை ஆசிரியர்கள் சாக்கிரத்தில் அதீத நிலையில் நின்றே ஞானகுரவராய் விளங்கித் தம்மை அடைந்த பக்குவர்கட்கு உண்மை ஞானத்தை வழங்கினர் என்பது அறியப்படும். அவ்வாசிரியர்கள்பால் உபதேசம் பெற்ற மாணாக்கர்கட்கு உண்மை ஞானம் கைவந்தமை அருணந்தி தேவர் தற்போதம் நீங்கி மெய்கண்ட தேவரையே சிவமாகக் காணும் நிலையை எய்தினார் என்ற வரலாறும், உமாபதி தேவரால் பெத்தான் சாம்பானும் முள்ளிச் செடியும் முத்தி பெற்ற வரலாறுகளும் பரக்கப் பேசுகின்றன. தாயுமான அடிகளும் மெளன குருவினையே சிவமாகக் கொண்டார் என்பதைச் சிந்திக்க இடம் தருகின்றது. வானகமும் மண்ணகமும் வந்தெதிர் விளங்கிடும்உன் மகிமையது சொல்லவெளிதோ?” என்பன போன்ற கூற்றுகள் இதற்குத் துணையாக அமை கின்றன. நிட்டைநிலையிற் செல்லுமுன்னே அது கைவருதற் பொருட்டு துரியநிலையில் நிற்பாரும் உளர். அவர் ஓராற்றால் ஆசாரியராதலன்றி மெய்கண்ட தேவர் முதலியோர்போல் பரமாசாரியராகார் என்பது ஈண்டு அறியப்பெறும். 59. சித்தியார் 2.5 70. சித்தியார் 4-(22-40) கண்டுதெளியலாம். 71. த.பா. மெளன குருவணக்கம் - 7