பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 363 (7) அணைந்தோர் தன்மை. 'சீவன் முத்தரே அணைந்தோர் என்றும் வழங்கப் பெறுவர். அணைந்தோர் என்பதற்குச் சிவனை அணைந் தோர் என்பது பொருள். நிட்டை நிலையில் சிவனை அணைந் தோர்க்கும் குருலிங்க சங்க வழிபாடும் பிற சமய நெறிகளும் தேவைதான் என்பது ஈண்டு விளக்கம் அடைகின்றது. நிட்டை நிலையில் நின்று தம்மை மறந்தவர்க்கு குருலிங்க சங்கம வழிபாடும் உறங்கினோன் கைப்பொருள் அவனறியாது தானே நழுவி விழுதல் போலத் தாமே நீங்கிவிடும். அவ்வாறு நீங்காமல் அவற்றைத் தற்போதத்தால் தாமே வேண்டா என விலக்கின், பிறசெயல் வந்து பற்றும், பற்றவே அவற்றில் இச்சையுண்டாகி மீளவும் பிறப்பிற்கு ஏதுவாகும். இவ்வழிபாட்டைத் தற்போதத்தால் விலக்கச்செய் வதும் மலவாசனையேயாகும். அதனால் அவ்வாசனை தாக்கா திருக்கும்பொருட்டு மேற்சொல்லிய அனைத்தும் எவ்வாற் றேனும் துரியநிலைக்கண் நிற்பார் விட்டொழிதல் கூடாது என்பது உளங்கொள்ளத் தக்கது. ஒரு முக்கிய செய்தி. இவ்விடத்தில் ஒரு முக்கிய செய்தியையும் அறிதல் வேண்டும். அதாவது சரியை முதலிய சாதனங்களில் நிற்பவர்கட்கும் சாத்தியமாகிய ஞானத்தைப் பெற்றவர்கட்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன என்பது. பொருளற்ற வறியவர்கள் பெறுதலை அடைவதற்கு ஒடியாடி உழைக்கவேண்டும், இஃது இன்றியமையாதது. பொருளுடைய செல்வர்கட்கும் சோம்பல் கூடாது; உழைப்பு வேண்டும்’ என்று சான்றோர்கள் கூறும் கருத்துதான் யாது? வறியவர்கள் பொருளை அடைவதற்கும் செல்வர்கள் பொருளை அழியாமற் காத்தற்கும் உழைக்கின்றனர் என்பது நினைவில் இருத்துற் குரியது. "பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை” என்ற வள்ளுவர் வாக்கும் ஒர்ந்து உணர்தல்தகும். 7 குடுள்.252