பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வழிபாட்டு முறைகள் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்த்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழவிடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே.' சிந்தணைநின் றனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே: 1. திருவா. திருச்சதகம் - 1 2. மேலது - 26