பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வழிபாட்டு முறைகள் () மனிதன் இறைவனை வணங்கும் முறை இந்த உலகங்களையெல்லாம் படைத்தல், அவற்றைக் காத்தல், அவற்றை அழித்தல்-ஆகிய செயல்களை விளை யாட்டாகச் செய்பவன் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள். சைவசமயம் சங்கார காரணனையே முழுமுதற்கடவுளாகக் கொள்கின்றது. அத்தகைய பரம்பொருளை வழிபடுதல் ஆருயிர்களின் கடமை என்றும் அச்சமயம் வற்புறுத்துகின்றது. எப்படி வழிபடவேண்டும் என்பதை அருளாளர்கள் காட்டிப் போயுள்ளனர். அவர்களுள் ஒருவராகிய தாயுமான அடிகள் காட்டிப் போன நெறியை ஈண்டுச் சிந்திக்கலாம். கை ஒன்றுக்கு அழகு உண்டாவது அதில் அணியப் பெறும் ஆபரணங்களைப் பொறுத்ததன்று. எவருடைய கையையும் அணிகளைப் பூட்டி அலங்கரித்து விடலாம். ஆனால் நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கும் கையே அழகிய கையாகின்றது. நற்செயல்களிலெல்லாம் சிறந்தது. ஆண்டவனை ஆராதிப்பது. இறைவனைப் போற்றுதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றின் வழியாக மனத்தை இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். நல்ல மனத்திற்குக் குறியீடாக அமைந்திருப்பது மலர். அதனிடத்துப் புதுமையும் எழிலும்