பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 37] தாக்கும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு, உணர்ச்சி மிக மேலான நிலைக்குப் போய்விட்டால் நாக்கு குளறத் தொடங்குகின்றது; சொல்லே தெளிவற்றதாய் விடுகின்றது. எனினும் உள்ளத்தை அவ்வுணர்வு ஆழ்ந்து பற்றிப் பிடிக்கின்றது. இத்தகைய பேருணர்வுநிலையிலிருந்து நா குளறிக்கொண்டு சொல்லுகிற இடத்து அது மிகப் பெரிய போற்றுதலாகமாதி விடுகின்றது. மொழி தழுதழுத்திடல் என்பது நாகுளறுதலுக்கு அமைந்த மற்றொரு சொற்றொடர். போற்றப்படும் பொருளிடத்து ஒன்று படும் நிலை வணங்குதல் ஆகும். இக்கருத்தைச் சங்கரசுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட' என்று இயம்புவர் அந்த ஞானச் செல்வர். ... ஆறு ஓடாது போய்க் கொண்டிருப்பதுபோல் மனிதனும் ஓயாது போய்க் கொண்டிருக்கின்றான். தான் போய்க் கொண்டிருப்பது மனிதனுக்கு விளங்குவது இல்லை. ஓயாது போய்க் கொண்டிருக்கும் பூமி இருந்த இடத்திலே இருப்பது போன்று தென்படுகின்றது. பூமி இடம் மாதிப்போய்க் கொண்டிருந்தாலும் நிலைமாறிப் போய்விடுவதில்லை. மனிதர் இருந்த இடத்திலே இருக்கலாம். ஆனால் அவன் ஓயாது நிலை மாறிப் போய்க் கொண்டிருக்கலாம். ஓடுகின்ற ஓடை உயிர்களுக்கும் பயிர்களுக்கும் வளத்தை வழங்கிக் கொண்டு ஒடுமானால் நீரோடைக்கு அது சன்மார்க்க மாகின்றது. நிலைமாறிப் போய்க் கொண்டிருக்கின்ற மனிதன் உயர்ந்த நிலைக்குப் போய்க் கொண்டிருப்பானானால் அது சன்மார்க்க நெறி. இந்நெறி சத்' என்ற பொருளை நோ.கிப் போயிருப்ப தாகப் பொருள்படுகின்றது. கடவுள் ஒருவரே சத் பொருள். அவரே மெய்ப்பொருள் என்றும் வழங்கப்பெறுகின்றார். முறையாகக் கடவுளை வணங்குபவர்கள் யாவரும் சன்மார்க் கத்தில் போய்க் கொண்டிருப்பவர்கள். "பெருநெறி பிடித் தொழுகவேண்டும்" என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுவ