பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் இராசகோபுரத்தைத் துல இல்ங்கம் என்று குறிப்பிடுவதும உண்டு. கண்ணுக்கு அது புல்ப்படும்பொழுது அதனையே தெய்வ சொரூபமாகக் கருதி வணங்குவது முறை. தொலைவி லிருப்பவர்கட்கும் இறைவனைப்பற்றி நினைவூட்டுவதற்கே இந்த அமைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கருதலாம். கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்ற பழமொழியையும் நினைவுகூரலாம். கோபுரக்காட்சி: இராசகோபுரத்திற்கு அருகில் வந்து அதன் அமைப்பை உற்று நோக்கினால் அதிசயிக்கத்தக்க பல உண்மைகள் புலனாகும். கணக்கற்ற வடிவங்களை அங்குக் காணலாம். விதவிதமான வாழ்க்கை முறைகளை அவை விளக்குவனவாக அமைகின்றன. தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அங்கு இடம்பெற்று இந்த அகிலத்திற்குக் குறியீடாக அமைகின்றன, உருவகமாக விளக்குகின்றது. இராசகோபுரத்தில் அருவருக்கத்தக்க சில வடிவங்களும் அமைந்திருப்பதைக் காணலாம். நாகரிகமான பண்புகளுக்கு இவை அறிகுறிகள் ஆகா. மனத்தில் மேலான கருத்துகளைத் தோற்றுவிப்பதற்கும் இவை துணைபுரியா. இந்த அமைப்புக் குக் காரணமும் உண்டு. இயற்கையின் நடைமுறை புறச் சின்னம் அல்லவா? நாகரிகம் அநாகரிகம் ஆகிய இரண்டும் இயற்கையில் இடம் பெற்றுள்ளனவன்றோ? பாராட்டத்தக்க பெருவாழ்வும் பழிக்கத்தக்க சிற்றியல்பும் சிறுசெயல்களும் இயற்கையில் இடம் பெற்றுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கோபுரம் அமைந்துள்ளது என்பது அறியப்படும். கோபுர வாயில்கள்: வாழ்க்கையின் குறிக்கோளை விளக்குவதாகவும் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. இராச கோபுரத்தின் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படையில்தான்