பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பெரியோர்கள் ஆழ்ந்து எண்ணிய எண்ணங்கள் நிறையப் பெற்ற இடம் ஆலயம். அதனை வழிபடுபவன் அமைதியுற்று அமர்ந்திருப்பானாகில் அந்த உயர்ந்த எண்ணங்கள் அவன் மனத்தில் பிரதிபலிக்கும். அதுவே ஆலயவழிபாட்டினால் அவன் அடையும் பெரும் பேறாகும். எத்தனை பேர் ஆலயத்துக்குள் வந்து வணங்குகின்றார்களோ அதற்கேற்ப ஆலயத்தினுள் ஏற்கெனவே அமைந்துள்ளன அருள் பன் மடங்கு பெரிதாகின்றது. அருளைத் தானே அடைவதன்மூலம் ஆலயத்தின்கண் அன்பன் அதனைப் பெறுகின்றான். ஆலயவழிபாட்டின் ஒப்பற்ற பயன் இதுவேயாகும். (3) பூசை முறைகள் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வத்திற்குப் பலவிதமான உபசாரங்களுடன் ஆராதனை நடைபெறுகின்றது. இத்தகைய ஆராதனைகள் யாவும் ஆன்மசாதகன் - பக்தன்அடைந்து வரும் மனப்பரிபாகத்தின் புறச்செயல்களாகும். ஆராதனை செய்கின்றவர்கள் சதாசாரமே வடிவெடுத்தவர் களாக இருத்தல் வேண்டும். நல்லொழுக்கம் அவர்களிடம் ஓங்குமாயின் வழிபாடும் மேம்பாடுடையதாகின்றது. அபிடேகம்: தெய்வத்தின் திருமுழுக்கு (அபிடேகம்) நன் மனத்தில் அன்பை வளர்ப்பதற்கான அறிகுறியாகவே புறத்தே நிகழும் செயலாகும். நீராடியபின் நாம் உள்ளத் தெளிவை அடைவதை அநுபவித்தால் அறிகின்றோம். பால், தயிர், நெய் பஞ்சாமிர்தம் முதலியவற்றைச் சொரிந்தும் அபிடேகம் செய்வது வழக்கம். இவை யாவும் உடலை வளர்ப்பதற்கு ஏற்ற நல்லுணவு. நல்லுணவு படைத்து உடலை வளர்ப்பது போன்று நல்லெண்ணங்களை எண்ணி உள்ளத்தை வளர்க்க வேண்டும் என்பது கோட்பாடு. எண்ணத்திற்கேற்ப