பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் யத்தை மூர்த்தியிடமிருந்து அருட்சோதி ஒன்று கிளம்பி அதனைத் தொடுவதாக ஐதிகம். அத்தகைய அருள் தொட்ட பிறகு அது பிரசாதமாகின்றது. ஈசுவரப் பிரசாதமாக பக்தன் அதனை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவனுடைய அந்தக் கரணத் தூய்மைக்கு அது பேருதவி புரிகின்றது என்பது கோட்பாடு. திருக்கோயிலுக்குச் செல்லுகின்றவர்கள் வெறுங் கையோடு செல்லாகாது என்று பெருவழக்காக இன்றளவும் இருந்து வருவதை நினைவுகூரலாம்.' விளையும் நலன்: நமக்கு விருப்பமான பொருள் களைத் தெய்வத்திற்குப் படைப்பதால் நலன் ஒன்று நமக்கு விளைகின்றது. இறைவனுக்குப் படைக்காமல் நாம் உண்ட தில்லை என்ற கொள்கையால் உணவுப் பொருள்மீது நாம் வைத்திருக்கும் பற்றுதல் குறைகின்றது. இறைவனுக்குப் படைக்கப் பெறும் உணவு தூய உணவாக மாற்றப் பெறுகின்றது. அஃது ஈசுவரப் பிரசாதமானபிறகு மற்றவர்கட்கெல்லாம் வழங்கியான பிறகே எஞ்சியிருக்கும் சிறு பகுதியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். தெய்வத்தின் பெயரால் மன்னுயிர் களையெல்லாம் நம்முயிர் போன்று கருதும் மனப்பான்மையும் இதினின்றும் உண்டாகின்றது. எல்லா உயிர்களும் இறைவனுக் குச் சொந்தம். ஆதலால் எல்லாஉயிர்களையும் ஒம்புவதன் மூலம் இறைவன் நன்கு வழுத்தப்பெறுகின்றான். உணவு இல்லாது இறை வழிபாடு நிகழலாகாது என்பதன் கருத்து இதுவே. வள்ளல்பெரும்ான் இராமலிங்க அடிகள் உணர்த்தும் தத்துவமும் இஃதே என்பதை ஈண்டு நினைவுகூரலாம். மாந்தர்கள் சேகரிக்கும் உணவுப் பொருள்களில் பெரும் பகுதி ஆலயத்திற்கு வந்து விடுதல் முறை. திருக்கோயில் இக்கோட்பாடு குழந்தைகளையும், பெரியோர்களையும் காணச் செல்லும்போதும் அநுட்டிக்கப் பெறுகின்றது.