பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

গঙ্গালাকাuিজন । - . . . . 23 இவரது மாணவரது பரம்பரை வாயிலாகவே இத்தமிழ் நாடெங் கும் சித்தாந்த அறிவுச் சுடர் கொளுத்தும் ஒளி நிலையங் களாகிய திருமடங்கள் ஏற்பட்டன. முதல் மாணவர் பரம்பரை யில் வந்த நமச்சிவாய தேசிகரால் நிலைபேறெய்திய மடம் திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். அதே பரம்பரையில் வந்த ஞானசம்பந்த தேசிகரால் தருமபுர ஆதீனம் ஏற்படுத்தப்பெற்றது. மெய்கண்டதேவரது மாணவருள் முதல் நின்றவர் அவரது தந்தையாருக்குக் குலகுருவாகிய அரு ணந்தி சிவாச்சாரியார் என்பது நாம் அறிந்தது. பதினான்கு சித்தாந்த நூல்களுள் ஒன்றாகிய உண்மை விளக்கம் நூலாசிரியராகிய மனவாசகம் கடந்தவரும் அவருள் ஒருவர். சிற்றம் பலநாடிகளும் அவருள் ஒருவர் என்ற கருத்தும் உண்டு. மெய்கண்டதேவர் தமது மாணவருக்கு உண்மைப் பொருள் உணர்த்திய பின்னர் நனவிலேயே அதீதத்தைப் புரிபவராய் இடையறாது சமாதி நிலையிலிருந்து ஐப்பசித் திங்களில் சுவாதி நாளில் சிவபெருமானோடு இரண்டறக் கலத்தலாகிய பரமுத்தியை அடைந்தார். (4) அருணந்தி தேவர். இவர் ஆதி சைவ மரபினர். நடுநாட்டிலேயுள்ள திருத்துறையூரில் வாழ்ந்தவர். மெய் கண்டதேவருடைய தந்தையாருக்குக் குலகுரு. மெய்கண்ட தேவர் அவதரிப்பதற்குக் காரணமாயிருந்தவர். இவர் சிவா கமங்களனைத்தையும் கற்றுத் துறை போகிய வித்தகராதலால் சகலாகம பண்டிதர் என்ற உயர்ந்த பட்டம் பெற்றிருந்தார். இவர் வடமொழியில் வேதம் முதலிய கலைகள் யாவற்றையும் கற்றவர். பன்னிரு திருமுறைகளையும் மிக்க பக்தியுடன் கற்றுப்போற்றியவர். . . . - இவர் தம் நாட்டிலுள்ள சைவர்கள் பலருக்கும் குலகுரு வாக இருந்து ஐந்தெழுத்து ஒதுவித்தும், தமது பெரும்