பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 385 களில் உண்டி வைக்கப்பெற்று அதில் மக்கள் பணம் போடும் வழக்கம் இருந்து வருகின்றது. இந்தப் பணம் இறைவன் பெயரால் பல காரியங்கட்குப் பயன்படுகின்றது. இறைவன் பெயரால் கொடுக்கப்படும் பொழுது கொடுக்கிறவனுக்குத் தான் கொடையாளி என்ற அகங்காரம் தோன்றாது. ஈசுவரப் பிரசாதமாக ஏற்கின்றவர்கட்கும் பிறரிடமிருந்து பொருளை ஏற்கின்றோம் என்ற தாழ்வு மனப்பான்மையும் தோன்றாது. கொடுப்பவரும் ஏற்பவரும் இறைவனுக்கு உரியவர்களாகி விடுகின்றனர். மனப்பான்மை மேன்மையடைவதற்குப் பொருளைக் கடவுளுக்கு நைவேத்தியமாகப் படைப்பதும், உண்டியில் போடுவதும் சிறந்த வழிபாடாகும். தீப ஆராதனை: திருக்கோயில்களில் நடைபெறும் கிரியைகள் யாவும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த வையாகும். தீப ஆராதனையை எடுத்துக் கொள்வோம். அஞ்ஞானம் என்னும் திரைநீக்கப் பெற்றவுடன் சோதிப் பிழம்பாகப் பல அடுக்குகள் கொண்ட அடுக்குத் தீபம் (அலங்காரத் தீபம்) ஏற்றி - இறக்கி - சுழற்றிக் - காட்டப் பெறுகின்றது. அஞ்ஞான இருளின்று ஞானபூமிக்குள் பிரவேசிக்கும் பக்தன் ஒரே ஒளிப்பிழம்பைக் காண்கிறான். அந்த ஒளிப்பிழம்பில் அவன் ஒன்றித்து விடுவதற்குச் சிறிது நேரமாகின்றது. பரம்பொருள் என்றைக்கும் அணையாத ஆன்மப் பிரகாசமாக உள்ளார். அடுக்குத்தீபத்தில் கணக்கற்ற விளக்குகள் உள்ளன. அதன் பிறகு காட்டப்பெறும் தீபங்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இறுதியாக ஒரு தீபத்தில் வந்து ஆராதனை முற்றுப் பெறுகின்றது. - பிற ஆராதனைகள்: இறைவன் ஆராதனையில் உலகினை அறிவதற்கு இறைவனால் வழங்கப்பெற்ற ஐம்பொறிகளும் இடம் பெறுகின்றன. இவை பரமனை