பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் _Y தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதாலும் எதை வேண்டு மானாலும் மனிதன் பெறுதல் கூடும். எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்." என்பது பொய்யாமொழி. தெய்வத்தை விதிப்படி வணங்குப வன் தெய்வத்தன்மையை எய்துகின்றான். மனிதனுக்கு உரிமை யல்லாத ஒன்றை அவன் அடைதல் முடியாது. தன்னிடத்து இல்லாத இயல்பை வருவித்துக் கொள்ளுதலும் சாத்தியமன்று. விரும்பியவாறும் விரும்பினபடியும் முயல்வதற்கு ஏற்றவாறு சிறுமை அல்லது பெருமை அவனை வந்தடைகின்றது. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்பது வள்ளுவம். சிறுமையை அடைதல் எளிது. பெரு மையை அடைவதற்கோ தக்க விதிப்படி மிகப் பாடுபட வேண்டும். தெய்வத் தன்மை மனிதனுக்கு அன்னியமானதன்று. மேன்மைகள் அனைத்தும் அவனிடத்துப் பிரியாது அமைந்துள்ளன. மறைந்து கிடக்கும் அவற்றை மேலோங்கிச் செய்தல் வாழ்க்கையின் சீரிய நோக்கமாக இருத்தல் வேண்டும். உயர்தன்மை ஓங்க ஓங்க மனிதன் இறைவனுக்கு உகந்தவன் ஆகின்றான். இறைவனோடு உறவாடுவதற்கு உற்ற உபாயமும் இதுவேயாகும். தன்னைத் தான் பக்குவப்படுத்திக் கொள்வதன்மூலம் தெய்வத்தின் சந்நிதியைச் சார மனிதன் தகுந்தவனாகி விடுகின்றான். ஆலயங்களுள் சிறந்தது உடல். உயிருக்கு இருப்பிடம் உடல். உடலைக் கொண்டல்லாது உயிரை அறிய முடியாது. 12. குறள். 666 (வினைத் திட்பம்) 13. மேலது 505 (தெரிந்து தெளிதல்)