பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் . 389 இருப்பிடத்தின்மூலம் உயிரின் உயர்வு வெளியாகின்றது. உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாகவும் ஆதாரமாகவும் இருப்பது எதுவோ அதுவே கடவுள் பதி. ஆதலின் அஃது உயிருக்கு உயிர் என்று இயம்பப்படுகின்றது. பேரறிவுக்கும், அன்புக்கும், ஆற்றலுக்கும் உறைவிடம் அதுவே. பார்க்கு மிடம் எங்கும் அது நீக்கமற நிறைந்துள்ளது. அதன் முழுமை யான காட்சி வரும்போது வாழ்க்கையின் இரகசியமெல்லாம் நமக்குத் தெளிவாகி விடும். அக்காட்சியைப் பெறுவதற்கு வழி ஒன்று உண்டு. அஃது என்ன? சிற்றுடலின்மூலம் நமது சிற்றுயிர் ஒளிர்கின்றது. பேருடலாகிய இயற்கை முழுவதன்மூலம் இறைவன் ஒளிர்கின் றான். இன்னும் இயற்கைக்கு அப்பாலும் அவன் உள்ளான். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிலவுகின்றான். ஆதி அந்தம் காட்டாத முதலாய் நிற்கின்றான். இயற்கையின் வாயிலாக அவனது ஒரு சிறு கூறு மட்டிலும் மிளிர்கின்றது. இறைவனை அறிவதற்கு இயற்கை அல்லது பிரகிருதியே உற்ற வழியாக அமைகின்றது. எல்லையில் அடங்காது பிரம்மாண்டமாயிருக்கும் பிரகிருதியின் அனுப்போன்ற ஒரு சிறு பகுதியே நமது உடல். பிரம்மாண்டத்தின் பெருமை முழுதும் சிறு பிண்டமாகிய நமது உடலில் உள்ளது. 'அண்டத்தைப்போலத்தான் பிண்டமும் என்ற பழமொழியை யும் சிந்திக்கலாம். நமது உடலையும் அதனுள் ஒளிர்பவனை யும் உள்ளபடி தெரிந்து கொண்டால் அகிலாண்ட கோடி பிரமாண்டமான நாயகனையும் தெரிந்து கொள்ள இயலும், ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அமைகின்றதை யும் அறிகின்றோம். w திருக்கோயிலில் இறைவனைத் தொழும்போது ஆலயங்கள் அனைத்திலும் சாலச் சிறந்ததான நம் உடலில்