பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் .) ソ必 தன்னையறியாது மனிதனுக்கு வியப்பு வந்து விடுகின்றது. அதனைக் கண்டு அதிசயிக்கவும் செய்கின்றான். (2) மெய்ப் பொருளின் மகத்துவத்தை உணர்வதால் உண்டாகும் அதிசயமே பூசையாகின்றது. (எ.டு) மணிவாசகப்பெருமா னின் கீர்த்தித் திருவகவல், அற்புதப்பத்து, திருவார்த்தை, அதிசயப்பத்து, அச்சோப்பதிகம் இவற்றை நோக்கலாம். பேராற்றல் படைத்துள்ள ஒன்றை நெருங்குவதற்கு ஏற்ப தன் துயரங்களும் அச்சங்களும் நீக்கப் பெறுவதை மனிதன் காண்கின்றான். அப்போது அவன் அல்லலை நீக்கும் பரம்பொருளின்கண் அடிபணிகின்றான். வேறு எவ்விதத்தி லும் நன்றி செலுத்த இயலுவதில்லை. (3) ஆதலால், அச்சத்தைத் தவிர்த்தலும், அடிபணிதலும் பூசையின் பகுதிகளாகின்றன. எ-டு 'நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் அப்பர் தேவாரம் (6.98) எண்ணுள்ள திருத் தாண்டகம்; முன்னம் அவனுடைய திருநாமம் (6.257) என்ற அப்பர் திருத்தாண்டகம், மணிவாசகப் பெருமானின் பிடித்த உத்து (திருவாசகம்). இறைவனது சட்டத்திற்கு அடிபணிந்து ஒழுகுமளவு மனிதனுக்குச் சீரும் சிறப்பும் உண்டாகின்றன. அதனால் மனிதன் தனக்கு உண்டாகும் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் தன் இறைவனைப் போற்றவும், வழுத்தவும், வணங்கவும் செய்கின்றான். உள்ளத்தின் உவகையே வணக்கமாக வடிவெடுக்கின்றது. இறைவனைப் பற்றிய புகழெல்லாம் பொருள்சேர்ந்த புகழாகின்றது. ஏனென்றால் மனம் எப்படியோ மொழியும் அவ்விதமாக அமைந்து விடுகின்றது. (4) மனங் கசிந்து போற்றுதலும், வழுத்தலும் பூசனையின் கூறுபாடு களாகின்றன. (எ-டு) மணிவாசகப் பெருமானின் போற்றித் திருஅகவல் (திருவா), ஆனந்தமாலை, அச்சோப்பதிகம்