பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 393 (திருவா), வள்ளல்பெருமானின் அருள் விளக்க மாலை (ஆறாம் திருமுறை போன்றவை) இவற்றை நோக்கலாம். இறைவனைப் பாவிப்பாளின் பாவனை அறுபடுகின்றது. அவனுடைய மேன்மையைச் சிந்திக்க மனமே மேன்மை யுறுகின்றது. தெய்வசம்பத்தில் தோய்ந்திருப்பவர்கட்கு ஆனந்தம் மேலிடுகின்றது. (5) ஆகவே, அவனைப் பாவிப்பதும் பூசையாகின்றது. எ-டு தாயுமான அடிகளின் 'பரசிவ வணக்கம் முதலிய பல பாடல்கள். உலகச் செயல்களெல்லாம் இறைவனுடைய சங்கற்பத் தின்படி நடைபெறுகின்றன. அவனது ஆணையாலன்றி ஓரணுவும் அசையாது. நமக்கு நன்மையாகவும், தீமையாகவும் தோன்றுபவை அவனுடைய ஆட்சியில் பொருத்தமுடையன வாகவே உள்ளன. இந்தப்பேருண்மையை அறியும் பக்தர்கள் தம்மையே ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்துவிடுகின்றனர். ஒரு சிறு செயலிலும் தங்கட்கு இச்சா சுதந்திரம் இல்லையென்ற எண்ணம் வந்து விடுகின்றது. (எ-டு) மணிவாசகப் பெருமா னின் குழைத்தபத்து, அடைக்கலப்பத்து திருவா), வள்ளல் பெருமானின் மகாதேவமாலை, அருள்விளக்கம்ாலை (ஆறாம்திருமுறை) (5) இத்தகைய சீரிய மனநிலையும் இறைவனுக்கு உகந்த பூசையாகும். (எ-டு) இசை விருந்தைச் சுவைப்பவர்கள் தங்களையே மறந்து இசையில் ஒன்றித்து விடுதல் போன்று ஈசுவர இயல்பில் ஒன்றித்து விடுபவர்கள் உண்டு. அவனது அருட்பிழம்பை எண்ணுங் கால் எண்ணுபவர், எண்ணம், எண்ணப்பெறும் பொருள் என்னும் மும்மை போய்விடுகின்றது. வள்ளல் பெருமானின் சிவசிவ ஜோதி, ஜோதியுள் ஜோதி, சிவபுண்ணியப் பேறு (ஆறாம் திருமுறை) முதலிய பாடல்களை நோக்கலாம். மணிவாசகப் பெருமானின் செத்திலாப்பத்து, (திருவா)