பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 . சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் என்பதையும் கருதலாம். இந்நிலையில் சீவபோதம் சிவபோதத் தில் ஐக்கியமாகிவிடுகின்றது. இரண்டறக் கலத்தல் என்ற இந்நிலையில் பூசை முழுநிறைவு பெறுகின்றது. இங்கன்ம் மனிதன் மேன்மையுறச் செய்யும் உபாயங்களெல்லாம் பூசையாகின்றன." (5) பூசை வகைகள் பூசையை மேற்கொள்வதில் இருவகை உண்டு. அவை () மானச பூசை (ii) பாகிய பூசை என்பவையாகும். (i) மானச பூசை உடலை வளர்க்கவும் தூய்மையாக் கவும் நாம் கடமைப்பட்டிருப்பது போன்று உள்ளத்தைப் பண்படுத்துவதிலும் அறிவுடையோர் கடமைப்பட்டுள்ளனர். மானச பூசையே அதற்கு உற்ற வழியாக அமைகின்றது. இல்லத்தில் அமைக்கப் பெற்றிருக்கும் பூசையறை அதற்கு ஏற்ற இடமாக அமைகின்றது. நறுமணமும் தெய்விகக் காட்சியும் அமைக்கப் பெற்ற அவ்வறையினுள் நீராடிவிட்டுத் தூய ஆடை அணிந்து கொண்டே செல்லுதல் வேண்டும். அப்படிச் செல்லும் சாதகன் தன்னந்தனியாய் அவ்வறையில் இருப்பது சாலச் சிறந்தது. அங்கு எழுந்தருளப் பண்ணி யிருக்கும் தன் விருப்ப தெய்வத்தை அவன் கீழே வீழ்ந்து வணங்குதல் அதற்கு அடுத்த செயலாகும், உடலுக்குச் சிரமும் இல்லாதபடி ஒரு நல்ல இருக்கையின் மீது அமர்ந்து இருத்தல் வேண்டும். மனத்தை ஒருமைப்படுத்திக் கொண்டு உலகில் உள்ளோர் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று மனமாற வாழ்த்துவது இறைவழிபாட்டில் முதற் படியாகும்; ‘சுவஸ்தி வசனம் என்பதும், 18. சைவ சமய விளக்கு கடிதம்:51