பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் போதனையால் சைவ நெறி நிலைநாட்டியும் சைவ சித்தாந்தத் திற்கோர் தலைவராகத் திகழ்ந்தார். அவரிடம் ஞான நூல்க ளைப் பாடங்கேட்டவர்கள் எண்ணற்றவர். எவ்விடத்திற்குச் சென்றாலும் தமது மாணவர்க்கு நல்லது போதித்தற் பொருட் டும், சித்தாந்த உண்மைகளை நிலை நாட்டுதற் பொருட்டும், சிவாகமங்களைத் தனி வண்டியில் ஏற்றிக் கொண்டு போவதாக அவர் வரலாறு கூறும். இவர் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு பாதங்களையும் கூறும் மூலாகமங்களையும் உபாகமங்களையும், பாதுகாத்தது போல அவர்க்குப் பின், வந்தோர் பாதுகாவாமையால் பல மறைந்து சில மட்டிலும் அருகியே காணப் பெறுகின்றன. ஆசிரியர் மெய்கண்டார் குழவிப் பருவத்தினராயிருந் தும் மாணவர் பலர்க்கும் ஞானநூல் கற்பிக்கின்றார் என்பதைக் கேள்வியுற்ற அருணந்திதேவர் வியப்பு கொண்டு தூதர் சிலரை முன் விடுத்துத் திருவெண்ணெய் நல்லூருக்குத் தமது பரிவாரங்களோடும், விருதுகளோடும் புறப்பட்டார். அப்பகுதியி லுள்ள சைவ வேளாளர்கள் யாவரும் தெருக்களெங்கும் வாழை, கமுகு, தெங்கு என்றவற்றால் தோரணம் நாட்டி, வீடு தோறும் பூரண கும்பமெடுத்து, மங்கள வாத்தியங்களோடு தங்கள் குருவை எதிர்கொண்டு வணங்கினர். மெய்கண்டதேவர் மட்டிலும் அருள்நந்திதேவரின் வரவை எதிர்கொள்ளாது தமது இருக்கையில் வீற்றிருந்தனர். அதனைக் கண்ட அருணந்திதேவர் மெய்கண்டதேவர்.பால் நேரே சென்று அவர் தமது மாணவர்க்கு ஆணவமலத்தின் இயல்பினை எடுத்து மொழிவதைக் கேட்டு அவ்வருள் ஞானச் செம்மலை நோக்கிச் செருக்கும் சீற்றமும் உடையராய் ஆணவ சொரூபமான தென்னை என அதிர்ச்சியோடு வினவினவுடனே மெய்கண்டார் இன்முகத்தோடு அருள் நந்தியார் நேர்