பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 395 எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றிறியேன் பராபரமே. - - - பராபரம் - 221 என்ற தாயுமான அடிகளின் வாக்கும் இதற்கு வழிகாட்டியாக அமையும். இது முதற்படி இங்ங்னம் மனமார வாழ்த்துவதால் வேற்றுமையுணர்ச்சியும் பதைபதைப்பும் சித்தத்தினின்று அகலுகின்றன. இதனால் உள்ளம் இனிமையடைந்து சாந்தமும் மகிழ்ச்சியும் அதன்கண் பொலிகின்றன. இத்தகைய அமைதியான மனத்தால் பாவிக்கப் பெறும் எண்ணங்கள் மிக்க வலிமையைப் பெறுகின்றன. அடுத்தபடியாக மேற்கொள்ளப் பெறுவது நியாசம்' என்பது. உடலின் பல்வேறு உறுப்புகளைப் பலப்படுத்துவது என்பது இதன் பொருள். இதனைச் செய்யும் போது “உடலுக்கு இன்றியமையாதனவாக இருக்கும் ஐம்பொறிகள் தூய்மை அடைக. கண்கள் ஒளியுடையவை ஆகும். மங்களகரமான மொழிகளைக் கேட்பதற்கு செவி உதவுக. தற்செயல்களைப் புரிவதற்குக் கைகள் திறம் பெறுக. உடல் முழுவதும் தூய்மையாகுக. அவை தேசோமயமாய் ஒளிர்ந்து கொண்டிருக் கட்டும். வீரியமும் பலமும் உடலெங்கும் பரவுக." என்று எண்ணித் தியானம் செய்ய வேண்டும். இந்தத் தியானம் வலுவடையும்பொழுது நியாசம் நிறைவு பெறுகின்றது. இதனால் தூய மனமும் அதற்குகந்த உடலும் அமையப் பெறுகின்றன. இப்போது உடலும் உள்ளமும் இறைவனை வரவேற்பதற்குத் தகுந்தவையாகின்றன. இறைவன் சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வம்" என்று வழங்கப் பெறுகின்றான். இமைப்பொழுதும் நீங்காது உள்ளத்தில் உறைகின்ற அவனது சான்னித்தியத்தை 19. தா.பா. தேசோமயானந்தம்