பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் நினைவுபடுத்திக் கொள்ளுதலே ஆவாகனம்' அல்லது 'வரவேற்பு ஆகின்றது. காலையில் அலர்ந்த தாமரைப் பூ போன்ற உள்ளம் அவனுக்கு உகந்த ஆசனமாகின்றது. அதன்மீது சுயம் பிரகாசமான பரம்பொருளை எழுந்தருளப் பண்ண வேண்டும். ‘தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே' என்றவாறு யார்யாருக்கு எத்தகைய தெய்வ வடிவத்தில் விருப்பமோ அத்தகைய வடிவுடையவனாய் அவனை வரவேற்கலாம். இதயகமலத்தில் எழுந்தருளியுள்ள அவனுக்கு இனிய உபசாரங்கள் பல செய்தல் வேண்டும். இதுவே மானச பூசையாகும். இறைவன் மனத்தால் வழுத்தப் பெறுகின்றான். திருவடிகளை அலம்புவதற்கு முதலில் தீர்த்தம் அளிக்கப் பெறுகின்றது. மானச பூசையில் அன்பே அதற்கு மஞ்சன நீர் ஆகின்றது. பின்பு இறைவனுக்கு உள்ளம் என்னும் ஆசனம் அளிக்கப் பெறுகின்றது. அதே அன்பு நீர் மீண்டும் ஆசமனம் பண்ணுவதற்குத் தரப்பெறுகின்றது. நீரைக் கொண்டு முகம் துடைப்பதற்கும் அதனைத் துளி அளவு உட்கொள்ளுவதற்கும் ஆசமனம் பண்ணுதல்’ என்று பெயர். உலக வழக்கில் மலர்கள் இலைகள் முதலியவை அர்க்கியமாய்ப் படைக்கப் பெறுகின்றன. மேன்மை தாங்கிய மனமே இறைவனுக்குரிய அர்க்கியமாகின்றது. எல்லாராலும் சொந்தம் பாராட்டப் பெறுவது அவரவர் மனம். அதைத் தூயதாக்கி இறைவனுக்கு அர்க்கியமாகப் படைக்க வேண்டும். பின்னர் அன்பு என்னும் மஞ்சன நீரால் சித்தமிசை வீற்றிருக்கும் இறைவன் நீராட்டப் பெறுகின்றான். அடுத்தபடி அவன் அணிவதற்கு ஆடை வேண்டும். சிதாகாசம்' அல்லது உள்ளப் பெருவெளியே அவனுக்கு 20. இரண். திருவந் 44