பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் ஞானச் செல்வர்கள் கண்ட வழியல்லவா? ஆனால் இதனை முழு நிறைவுடன் செய்வதற்கு எல்லோராலும் இயலுவ தில்லை. சூக்குமப் பார்வையும் சூக்கும பாவனையும் உண்டாகும் வரை தூலப் பொருள்களின் உதவியை நாடுதலே முறை. சிறார்கட்குத் தொடக்க நிலைக் கல்வியில் குறிப்பாகக் கணிதம் கற்பதில் பயன்படுத்தப் பெறும் பல்வேறு உருவங்கள் போன்றவை இங்குப் பயன்படுத்தப்பெறும் பொருள்கள். ஆன்மசாதனத்தில் முதிர்ச்சி பெறுவதற்கு முன்பு மூர்த்தி வழிபாடு பெரிதும் பயன்படுகின்றது. இல்லத்தில் பூசை அறையில் எழுந்தருளச் செய்யப் பெற்றிருக்கும் தெய்வத் திருவுருவத்தின் முன்பு இந்த வழிபாட்டை - பாகிய பூசையை - மேற்கொள்ளலாம். - மானச பூசை செய்தானதும் அது மனத்திற் நன்றாய்ப் பதிதற் பொருட்டுத் திரும்பவும் ஒரு முறை பாகியத்தில் அதனைப் பக்தன் செய்கின்றான். சித்தமிசை குடிகொண்டிருக் கும் தெய்வம் தன் எதிரேயுள்ள திருமேனியில் அல்லது படத்தில் ஆவிர்ப்பவிக்கும்படி வேண்டுகின்றான். இந்நிலை யில் அவன் கண்விழித்துப் பார்க்கும் பொழுது தன் முன்னிலையில் எழுந்தருளியிருக்கும் திருவுருவம் தெய்வத் தன்மையுடன் திகழ்வதைக் காண்கின்றான். தான் சேகரித்து வைத்துள்ள மஞ்சன நீர், சந்தனம் மலர்கள் முதலியவை, இப்போது பயன்படுகின்றது. பயபக்தியுடன் திருப்பாதத்திற்கு நீர் (பாதியம்), வார்க்கப் பெறுகின்றது. சந்தனம், வில்வம், திருத்துழாய், அறுகு, அட்சதை முதலியவற்றில் ஏதேனும் ஐந்து திரவியங்கள் அடங்கப் பெற்ற அர்க்கியம் படைக்கப் பெறுகின்றது. பின்பு, மனத்திற்குகந்தவாறு அபிடேகம், அலங்காரம், தூபதீபம், நைவேத்தியம், ஆசமனம், அர்ச்சனை, தோத்திரம் முதலியவற்றால் பாகிய பூசை நிறைவு பெறுகின்றது.