பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் நடேசப் பெருமானுக்குப் பூசை புரியத் தகுதியற்றவர் என்று இகழ்ந்தனர். ஆதலால் அவர் தில்லைக்குக் கீழ்த் திசையி லுள்ள கொற்றவன்குடி என்னும் ஊருக்குச் சென்று அங்கே மடம் ஒன்று அமைத்து அதில் தம் அடியார்கள் சூழச் சிவபெருமானை விதிப்படி வழிபட்டிருந்தார். - உமாபதி சிவம் பொன்னம்பலவருக்குப் பூசை செய்யும் வாய்ப்பின்றி கொற்றவன்குடி மடத்தில் தளர்வுற்றிருந்தார். ஏனைய தில்லைவாழ் அந்தணர்கள் திருமன்றிற் சென்று அழகிய சிற்றம்பலமுடையாரது பேடகத்தைத் திறந்து பார்க்க வும் அங்கே திருவடிவத்தைக் காணாமையால் அச்சமுற்றுப் பெருங்கவலையுற்றனர். அப்போது யாவரும் கேட்க விசும்பில் ஒலித்த மொழி: "நம்மைப் பூசையாற்றும் தகுதியுடையவன் உமாபதியாதலால் அவன்பால் அமர்ந்தோம்" என்பது. இதனைச் செவிமடுத்த யாவரும் ஒருங்குகூடித் தாயிடம் செல்லும் கன்றுகள் போல உமாபதி சிவத்தின் திருமடத்திற்கு ஓடிச் சென்று அவரிடம் தங்கள் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்றும், அவர் தில்லைப் பெருமானைப் பூசை செய்தல் வேண்டும் என்றும் குறையிரந்து நின்றனர். அவரும் அவ்வாறே அம்பலம் சென்று கடவுட் பூசை முடித்துத் தம் திருமடத்திற்கு மீண்டனர். . உமாபதிசிவம் தமது சீடர் பலருள்ளும் புலையர் (திருக்குலத்தார் குலத்திலுதித்த பெற்றான் சாம்பான் என்பார்க்கு முத்தி கொடுத்த வரலாறு மிகவும் அதிசயமானது. பெற்றான் சாம்பான் என்பவர் முற்பிறவியிலேயே பெருந்தவம் ஆற்றியும், சிறிது வழுவினதால் தாழ்குலத்தில் உதித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது. கொற்றவன் குடிக் குடியிருப்பு என்ற பெயருடன் வழங்கும் இதில் இப்ப்ோது பல்கலைக் கழகப், பேராசிரியர்கள் வாழ்கின்றனர்.'