பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தானாசாரியர்கள் 29 அவர் ஆடல் அரசரிடம் அன்புடையராய்த் திருக்கோயிலுக்கு விறகு வெட்டிக் கொண்டு வந்து சேர்ப்பதையே தமது பணிவிடையாகக் கொண்டார். அவருக்குக் கனவில் நடேசப் பெருமான் தோன்றித் தன்பால் பேரன்புடைய உமாபதி சிவத்துக்கும் பணிவிடை செய்யும்படி கட்டளையிட்டார். அவர் அவ்வாறே சென்று உமாபதி திருமடத்திற்கும் விறகு கொடுத்து வந்தார். ஒருநாள் பெருமாரியினால் அவர் கொண்டு வரத் தாமதித்தமையினால் மடத்தில் அமுது சமைக்கக் காலம் தாழ்ந்தது. அப்போது அதற்குக் காரணம் என்னவென்று சுவாமிகள் தமது சீடர்களை வினவ, சாம்பனாரது விறகு வராமையினால் தடையேற்பட்டது என்று அவர்கள் மறுமொழி கூறினர். மறுநாள் அவர் வந்தவுடன் தமக்குத் தெரிவிக்க வேண்டுமென்று உமாபதிசிவம் அவர்கட்குக் கட்டளை யிட்டார். - - மறுநாள் சாம்பனார் மடத்திற்கு விறகு கொண்டு வருவதற்கு முன் கடவுள் ஒரு பெரியவர் வடிவம் போல் அவருக்குத் தோன்றி ஒரு சீட்டு கொடுத்து அதனை உமா பதியாரிடம் அளித்திடுமாறு பணித்தார். மறுநாள் திருமடத்திற்கு இரட்டைப் பங்கு விறகு கொண்டு வந்தவுடன் அங்குள்ள மாணவர்கள் உமாபதி சிவத்திற்கு அவர் வரவை அறிவித்த னர். அப்போது உமாபதி சிவம் அவர் யாரென்று வினவ, அவர் பெரியவர் கொடுத்த சீட்டை அவரிடம் கொடுத்தனர். அந்தத் திருமுகத்தைப் பார்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு உடலெங்கும் புளகாங்கிதம் கொண்டு கூத்தப் பெருமானின் திருவருளை வியந்தனர். அந்தச் சீட்டில் வரைந்திருந்த பாடல்: அடியாற் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் குடியாற் கெழுதியகைச் சீட்டுப்-படியின்மிசைப் பெற்றான் சாம்பனுக்குப் பேதமறத் தீக்கை செய்து முத்தி கொடுக்க முறை.