பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - - சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் என்பது. இத்திருப்பாட்டின் கருத்தின்படி பெற்றான் சாம்பனாருக்கு ஞானத் தீட்சை தொடங்கவும், அப்போதே அவர் வீடு பேறு எய்துவதற்குரிய பக்குவமுடையவராக இருந்தமையால் அதற்குத்தக்க முறையாக சுவாமிகள் அருள் செய்தவுடன் அவர் முக்தி அடைந்தார். - இதன் உண்மை உணராத சாம்பனாரது சுற்றத்தினரும், துணைவியரும் மனங்கலங்கி மன்னரிடம் சென்று அவரைச் சுவாமிகள் தீயால் எரித்து விட்டதாகக் குறை கூறித் துயருழந்தனர். அப்போது அரசன் சுவாமிகள்பால் சென்று அதைப் பற்றி உசாவிய பொழுது சுவாமிகள் தீக்கையின் மேன்மையை எடுத்து விளக்கினார்கள். அரசன், அங்ங்னமா யின் மற்றொரு தீக்கை அவ்வாறு செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். அப்போது சுவாமிகள் தமது அடியார் கள் குழாத்தை நோக்கி அவருள் சத்திநிபாதம் பெற்றவர் இலராகவே சூழ்ந்து பார்த்துச் சிவபெருமான் திருமஞ்சன நீராலே வளர்ந்ததாய்க் கோமுகையின் பக்கத்திலே இருந்த முள்ளிச் செடியைத் தக்கது என்று கண்டார். தமது அருட் பார்வையால் அம்முள்ளிச் செடியை நோக்கியவுடன் அஃது ஒளிமயமாகி ஒரு பிழம்பாக விசும்பில் எழுந்து மறைந்து சிவனோடு கலந்தது. அப்போது அதனைக் கண்ணுற்ற அரசன் எல்லையற்ற வியப்பும் மகிழ்ச்சியுமடைந்து சுவாமிகளுடைய திருவடிகளை வணங்கி அவருக்குப் பொன்னாடை, மலர் மாலை முதலியன சாத்தித் தன் பிழைபொறுக்கும்படி வேண்டிக் கொண்டு தன் அரண்மனைக்கேகினன். பின்னர் ஒருநாள் தில்லையில் திருவிழாவிற்குக் கொடி யேற்ற அங்குள்ள அந்தணர்கள் முயன்ற போது கொடி