பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தததுவங்கள - 1 (பத) - 35 வேதியியல் உண்மை: சற்காரியவாதத்தைச் சார்ந்து 'உள்ளது என்றும் அழிவதில்லை என்பதும் சொல்லப்படும். 'ஒரு மெழுகுவத்தி எரிவதால் இழப்பு ஒன்றும் இல்லை’ (Nothing is lost when a candle is burnt) Gróip Galá'u'àudio உண்மையும் இதனை யொத்ததாகும் என்பதையும் சிந்திக் கலாம். இதனையும் தெளிவாக்கலாம். உள்ளது எக்காலத்திலும் உள்ளதே, அஃது என்றும் இலதாதல் இல்லை. இங்ங்னமே இல்லது எக்காலத்தும் இல்லதே, அஃது என்றும் உளதாதல் இல்லை. ஆகவே தோற்றம்’ என்பதும், அழிவு என்பதும் அவற்றையுடைய பொருள்களின் நிலைமாற்றங்களேயன்றி வேறல்ல என்பது தெளிவு. தோன்றி அழியும்நிலை காரிய நிலை’ என்றும் தோற்றத்திற்கு முன்னும் அழிவிற்குப் பின்னும் உள்ள நிலை காரண நிலை என்றும் வழங்கப் பெறும். இதனால், தோன்றுதல் என்பது காரணநிலையிலிருந்து காரியநிலையை அடைவதாகும்; அழிதலாவது, காரிய நிலை யிலிருந்து மீண்டும் காரணநிலையை அடைவதாகும். இதனைக் கருத்தில் இருத்துதல் இன்றியமையாதது. எடுத்துக்காட்டு: இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். குடம் தோன்றிற்று என்பதில் மண் என்னும் நிலையிலிருந்து குடம்’ என்னும் நிலையை அடைந்தது என்பதே பொருள். 'குடம் அழிந்தது' என்பதில் குடம்’ என்னும் நிலையிலிருந்து முன்போல் மண்” என்னும் நிலையை அடைந்தது என்பதுவே பொருளாகும். இவ்வாறு பொருள் நிலையில் வேறுபடினும் இரு நிலைகளிலும் பொருளின் தன்மை மாறாமல் ஒன்று போலவே இருக்கும். அதாவது மட்குடம் மண்ணின் தன்மையையும் "பொற்குடம் பொன்னின் தன்மையையும் கொண்டிருத்தலால் இதனைத் தெளியலாம். இதனால் பயன்வேறுபாடுபற்றிக் காரணப் பொருளையும், காரியப் பொருளையும் மண்'