பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் என்றும், குடம் என்றும் பொன்’ என்றும் ஆபரணம்’ என்றும் வேறுவேறு பொருள்போல வழங்கினாலும், பொருள் தன்மையால் அவை ஒன்றேயாதல் ஈண்டுத் தெளியப்படும். இன்னொருவித விளக்கம்: தோற்றமும் அழிவும் பொருள்களின் நிலைமாற்றங்கள் என்பது எப்படி? முன் சூக்குமமாய்- நுட்பமாய்- விளங்காது உள்ள பொருளே பின் துலமாய்- பருமையாய்- விளங்கி நிற்கும் என்பதே இதன் விளக்கமாகும் என்பது ஈண்டு அறியப்படும். இரண்டு எடுத்துக்காட்டுகளால் இதனைத் தெளியலாம். (அ) எள்ளைப் பிழிந்தால் எண்ணெய் தோன்றும்; மணலைப் பிழிந்தால் எண்ணெய் தோன்றுமா? தோன்றாது. ஏன் தோன்றாது? எள்ளில் எண்ணெய் சூக்குமமாய் உள்ளது; மணலில் எண்ணெய் எவ்வகையிலும் இல்லை. அதனால் எள்ளைப் பிழிந்தால் எண்ணெய் தோன்றுகிறது. மணலை அவ்வாறு செய்தால் எண்ணெய் தோன்றுவதில்லை. (ஆ) முயற் குட்டி, பசுங்கன்று, யானைக்கன்றுஇவற்றின் தலையில் தொடக்கத்தில் கொம்பு இல்லை; நாளடைவில் பசுங்கன்றின் தலையில் கொம்பு தோன்றுகின்றது. இது போலவே யானைக் கன்றின் வாயிலிருந்தும் தந்தம் தோன்றுகின்றது. என்? பசுங்கன்றின் தலையில் கொம்பு சூக்குமமாய் உள்ளது. அதனால் அது பின்பு துலமாய்த் தோன்றுகின்றது. யானைக் கன்றின் வாயிலும் தந்தம் சூக்கும மாய் உள்ளது. அதனால், அது பின்பு தூலமாய்த் தோன்று கின்றது. முயல் குட்டியின் தலையில் கொம்பு எவ்வகையிலும் இல்லை. அதனால் அஃது எக்காலத்திலும் தோன்றுவதில்லை. இவற்றால் இல்லாதது எக்காலத்தும் இல்லாததே என்பது தெளிவு. அதனால் உள்ளதுதான் தோன்றும்; இல்லது தோன் றாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆகவே