பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 37 தூலமாய்த் தோன்றும் பொருள்கள் யாவும் அவ்வாறு தோன்றவதற்கு முன்னர் சூக்குமமாய் உள்ள பொருள்களே என்பது தெளிவாகின்றதல்லவா? இங்ங்னம் கூறும் சற்காரியத்தையே உமாபதி சிவாச்சாரியாரும் மருவு சற்காரி யத்தாய்" என்று தமது சிவப்பிரகாச நூலில் கூறியருளினார் என்பதும் ஈண்டு உளங்கொள்ளத் தக்கது. மேலும் விளக்கம்: 'இல்லாமல் பிறவாது, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பன போன்ற முது மொழிகள் பலவும் சற்கானிய வாதத்தையே விளக்குவனவாகக் கொள்வதில் தவறில்லை. இந்த வாதமுறை இல்லையாயின் மண்ணிலிருந்து ஆடையும், நூலிலிருந்து குடமும், நெல்லி லிருந்து கமுகும் தோன்றுகின்ற வரையறை இல்லா தொழியும். நிலத்தை அகழ்ந்தால் நீர் தோன்றுகின்றது; சில இடங்களில் பொன் முதலிய விலையுயர்ந்த பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றுக்குக் காரணம் அப்பொருள்கள் ஆங்காங்கு இருப்ப தேயாகும் என்பது தெளிவு; அதனால் உள்ளதே தோன்றும்’ என்னும் சற்காரியவாதம் எளிதில் உடன்படக் கூடியது என்பதும் தெளிவாகின்றதல்லவா இன்னோர் உண்மையையும் ஈண்டுச் சிந்திக்கலாம். நிலத்தினுள் நீர் முதலியன பருநிலையில் உள்ளனவாதலால் அவற்றது உண்மை எளிதில் புலனாகின்றது. ஆனால் மண் முதலியவற்றில் குடம் முதலியவை நுண்ணிலையில் இருப்பதால் அவற்றது உண்மையை அரிதில் தான் உணர வேண்டும்; சிந்தித்துதான் தெளிதல் வேண்டும். - முப்பொருள்கள் விளக்கம். மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில் பதி, பசு, பாசங்களை நோக்குவோம். இந்த மூன்று பொருள்களின் தன்மைகளும் மாறுபட்டுக் காணப் 6. சிவப்பிரகாசம்+1