பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் களில் இருந்தவையேயாகும். ஆயினும், காரணங்களில் நுண்ணிய நிலையில் புலனாகாமல் இருந்த அவை பருநிலை யில் தாமாகவே தோன்றா. குயவனும், நெசவாளனும் பொற்கொல்லனும் ஆகிய செய்வோர்களால் தோன்றினமை கண்கூடாகும். இனி, குடம் ஆடை அணிகலன் அல்லது பிறகாரியப் பொருள்கள் செய்வோர் இன்றித் தோன்றாமை காட்சியளவையால் நாம் காணும் உண்மையாகும். ஆகவே, 'உள்ளனவாய் நின்று தோன்றும் பொருள்கள் யாவும் செய் வோனைக் காரணமாக உடையன என்பது வெள்ளிடை விலங் கலாகும். இதனால் சற்காரியமுறைப்படி தோன்றுவதாகிய உலகத்திற்கு அதனைத் தோற்றுவித்தற்குக் கருத்தா ஒருவன் இன்றியமையாதவன் என்பது வலியுறுதல் தெளிவாகின்றது. இன்னொரு விளக்கம்: ஒருகாரியத்திற்கு முதற்கார ணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்னும் மூன்று காரணங்கள் இன்றியமையாதவை என்பதை நாம் அறிவோம். (எ-டு) குடமாகிய காரியத்திற்கு மண் முதற்காரணம்; தண்ட சக்கரம் துணைக் காரணம்; குயவன் நிமித்த காரணம். அதுபோல உலகமாகிய காரியத்திற்கு மாயை முதற்காரணம்; கடவுளது ஆற்றல் துணைக்காரணம்; கடவுள் நிமித்த காரணம். இவற்றால், (1) காரியம் பொருள்கட்குக் கருத்தா இன்றியமை யாமை என்பது தெளிவு. இன்னோர் உண்மை சற்காரிய வாதம் அறிவும் அறி வில்லாததும் வேறு வேறு என்று வகைப்படுத்திக் காட்டு கின்றது. உள்ளது தோன்றுமேயன்றி இல்லது தோன்றாமை யின், அறிவில்லாத பொருளில் அறிவு என்றும் தோன்றுவ தில்லை என்றும் தெரிவிக்கின்றது. மேலும் அறிவில்லாத பொருள் தானாகவும் செயல்படுவதில்லை என்பதும் அறியத்