பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் بسته முகக்கப்படும். பிறவும் பிரிக்கப்படுவனவாகும். எல்லாப் பொருள்களும் அணுக்களாகப் பிரிக்கப்படும் என்பது ஓர் அறிவியல் உண்மை. இதனால் உலகம் அவயவப் பகுப்புடை யது என்பது தெளிவாகிறது. இவ்வாறு பிரிக்கப்படும் தன்மை ஆக்க அழிவுகட்குக் காரணமாதலை அனைவரும் அறிவர். (ஆ) சடமாயும் பலவாயும் இருத்தல் சடம்-அறிவில் லாதது. அறிவில்லாத பொருள் ஒன்றாய்ப் பலவாய் இருப்பின் அவை தோன்றி அழிவனவாகும். இதனை மண், பொன், வெள்ளி முதலிய உலோகங்களால் ஆக்கப்படும் பொருள் களும் பிற ஆக்கப்படும் பொருள்களும் ஒன்றாய் இல்லாது பலவாய் இருத்தலை அறியலாம். (இ) சுட்டியுணர்தல்: கண் முதலிய பொருள்களுக்கு உட்படுமாறு, இஃது இன்ன தன்மையுடையது' என்று வரையறுத்து உணர்வதாகும். இவ்வாறு கருவி கரணங்களால் அளந்தறியப்படும் பொருள்களனைத்தும் தோன்றி அழியக் கூடியன என்பது தெளிவு. இம்மூன்று கருத்துகளையே மெய்கண்டார் அவன், அவள் அது எனும் அவை' என்றும், வார்த்திகத்தில் "ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம்" என்றும் கூறியிருப்பது நோக்கத்தக்கது. இவற்றால் உலகம் முத்தொழில்களை உடைமை யால் உள்பொருளே என்பதும், உளதாய்த் தொழிற்படுத்தும் 'உலகத்தை அவ்வாறு தொழிற்படுத்தும் கருத்தா ஒருவன் உளன்’ என்பதும் ஐயமின்றிப் பெறப்பட்டதை ஒர்ந்து அறியலாம். 7. சிஞர்.போகுத் 8. மேலது முதலதிகரணம்.வார்த்திகம் 3(i)