பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் இன்றியமையாமை கருதி எல்லோரையும் அழிக்கும் பொழுது ‘ஒருவர் இருவரை அழியாது நிறுத்தி வைப்பன் என்றற்கு ஒரு காரணமும் இல்லையன்றோ? எனவே, அழிய வேண்டிய காலத்தில் அழித்து, அழிந்த உலகம் மீளத்தோன்ற வேண்டிய காலத்தில் தோன்றுமாறு அனைத்தையும் தோற்றுவிப்பவன் அழித்தற் கடவுளேயன்றிப் பிறர் இல்லை என்பது அறியப் படும். இதனையே மெய்கண்ட தேவநாயனார் “ஒடுங்கிய சங்காரத்தின் அல்லது உற்பத்தி இன்மையின்” என்று உரைத் தருளினமையையும் நோக்கலாம். மேலும் விளக்கம்: சற்காரியவாதத்தை விளக்கும் போது அழித்தல்' என்பது தூல நிலையில் உள்ளவற்றைச் சூக்கும நிலையில் படுத்து ஒடுக்குதலாகும்; “ படைத்தல் என்பது சூக்குமநிலையில் உள்ளவற்றைத் துலநிலைக்குக் கொணர்தலாகும்; காத்தல் என்பது அங்ங்ணம் கால நிலைக் குக் கொணர்ந்தவற்றை அந்நிலையிலேயே நிறுத்துதலாகும்" என்று விளக்கியதை ஈண்டு நினைவு கூரலாம். மெய்கண்ட தேவரும் சங்காரகத்தை ஒடுங்கின சங்காரம்' என்று குறித்தது இது பற்றியேயாகும் என்பதையும் தெளியலாம். ‘சூக்குமநிலை என்பது காரணமும், முன்னே உள்ளதும், பெரியதும், நிலைபேறுடையதுமாகும், துலநிலை என்பது காரியமும், பின்னே தோன்றுவதும், சிறியதும், நிலையில்லாதது மாகும். இந்நிலையில் அழித்தல் சூக்குமத் தொழிலாதலின் அத்தொழிற்குத் தலைவன் காரணமும், முன்னே உள்ளவனும், பெரியோனும், நிலை பேறுடையவனுமாவன் துலத்தொழிற்குத் தலைவர் காரியரும், பின்னே தோன்றுவோரும் சிறியோரும் நிலையில்லாதவரும் ஆவர் என்பது நுண்ணுணர்வினோருக் குப் புலனாகாமற் போகாது. ஆகவே காரணனாகிய அழித்தற் 9. சி.ஞா.போ. சூத். 1. அதிகர.2. வார்த்தி.4. 10. மேலது