பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 49 அதனோடு அச்செயலையெல்லாம் உடன் இயைந்து இயற்றி நிற்றலால் சிவமும் சக்தியும் இரண்டாய்- அம்மை அப்பனாய் -மாதொருபாகனாய் -இரண்டாய்த் தோற்றம் அளிக்கும். இந்நிலையை ஆளுடைய பிள்ளையார். ஒர்உரு ஆயினை மானாங் காரத்து ஈர் இயல்பாய்? என்று தமது திருஎழுகூற்றிருக்கையில் அருளிச் செய்திருத் தலை ஈண்டுக் கருதலாம். அடுத்து, பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்' என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பகுதியும் இத்தடத்த நிலையையே குறிக்கிறது என்பதையும் எண்ணலாம். தடத்த நிலையில் பதி சக்தியினால் பல நிலைகளை யுடையது. இந்த நிலையில் அதற்கு உருவம் உண்டு; தொழில் உண்டு; அவற்றிற்கு ஏற்ற பலப்பல பெயர்களும் உண்டு. ஆயினும், இவையனைத்தும் இறைவனின் அருள் காரணமாக உண்மையாற் கொண்டனவேயாகும். சொரூட இலக்கணம் எப்படி உண்மையோ அப்படியே தடத்த இலக்கணமும் உண்மையாகும். தடத்த நிலையில் சிலவற்றை ஈண்டு விளக்குதல் பொருத்தமுடையதாகும். சொரூப நிலையில் பதி பரசிவம்’ என நிற்குங்கால் அதன் சக்தி பராசக்தி என வழங்கப்பெறும். அஃது உயிர்களின் அறிவை விளக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின் சொரூபம், பாரதி யாரின் சக்தி வழிபாடெல்லாம். இந்த சக்தியை நோக்கியே யாகும் என்று கருதலாம். 20. சம், தேவா 1.128; அடி 1-2. 21. புறம் - 1