பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) 51 விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை வெல்க காளி யெனதம்மை வெல்கவே' என்ற பாடலால் விளக்குவர். அடுத்து வரும் பாடல்களெல் லாம் இந்தச் சக்தியையே குறித்தனவாகும் என்று கருதலாம். சக்தி வகைகள்: திரோதான சக்தி உலகத்தைத் தொழிற்படுத்த வேண்டும் என இச்சித்தலால் அஃது இச்சா சக்தி' எனப்பெயர் பெறுகின்றது. அதற்குரிய வழிகளை அறிதலால் ஞானசக்தி' என்ற திருநாமத்தையும் ஏற்கின்றது. அவ்வழியே தொழிற்படுத்த நிற்றலால் கிரியா சக்தி என்ற திருப்பெயரையும் கொள்கின்றது. எனவே, பராசக்தி, ஆதி சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று இவை பஞ்ச சக்திகள் என்று தொகை நிலை பெற்றுத் திகழ்வதை யும் தெரிந்து கொள்ளலாம். . இச்சா சக்தி எப்பொழுதும் செயற்பாட்டுக்குத் துணை யாய் நிற்கும். மற்றைய இரண்டும் ஒவ்வொன்றும் தனித்தனி யாகவும், இணைந்தும், ஏறியும், குறைந்தும் செயற்படும். இதனால் தடத்த நிலைகள் பெரும்பான்மையாக ஐந்து வகைப்பட்டு நிற்கும். ஞானசக்தி மாத்திரம் தொழிற்படும் நிலையில் பதி சிவம் என நிற்கும்; கிரியா சக்தி மாத்திரம் தொழிற்படும் நிலையில் பதி சக்தி என நிற்கும்; இரண்டும ஒப்பத் தொழிற்படும் நிலையில் பதி சதாசிவம் என நிற்கும். ஞான சக்தி குறைந்து நிற்க, கிரியா சக்தி மிக்குத் தொழிற்படும் நிலையில் பதி மகேசுவரன் என நிற்கும். கிரியா சக்தி குறைந்து நிற்க, ஞானசக்தி மிக்குத் தொழிற்படும் நிலையில் பதி வித்தை என நிற்கும். இக்கூறியவற்றால் சொரூப நிலையில் இறைவன் தனக்கென்று ஓர் உருவும், தொழிலும் பெயரும் இல்லாத 24. மேலது. மகாசக்தி வாழ்த்து 3