பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இன்னும் ஒர் உண்மை. வீட்டின்பத்தை அடைந்த பின்னர் உயிர்கட்குத் தனு கரணம் முதலியவை வேண்டா, ஆயினும் அவ்வீட்டின்பத்தை எய்தும் நெறியில் செல்வதற்குத் தனுகரணம் முதலியவை இன்றியமையாதனவாகும். ஆகவே, வீட்டின்பத்தை நாடுவோருக்கும் அதனை அடைதற் பொருட்டு இறைவன் தனு கரணம் முதலியவற்றைக் கொடுத் தருள்கின்றனன் என்பதையும் அறிந்து மனத்தில் இருத்துதல் வேண்டும். (6) இறைவனுக்கு உலகத்தோடுள்ள தொடர்பு மெய்கண்டார் இத்தொடர்பை அத்துவிதம்' என்று விளக்குவார். அத்துவிதமானது இரண்டல்லாமை (அதாவது பிரிவின்மை) என்பது அவர் தரும் விளக்கம். அத்துவிதம் என்ற சொல்லே அந்நிய நாத்தியை (பிரிப்பின்மையை) உணர்த்துமாயிற்று' என்று உரைத்தருளினமை காணத்தக்கது. ‘பிரிவின்மை’ எனவே, பொருள் இரண்டு என்பதும், 'இரண்டாயினும் வேறு வேறாய் நில்லாது ஒன்றியே நிற்கும் என்பதும் பெறப்படும். அத்துவிதத் தொடர்பில் அபேதம், பேதம், பேதாபேதம் என்ற மூன்று தன்மையும் ஒருங்கு காணப்பெறுகின்றது. இம்மூன்றற்கும் பொதுவாய் நிற்றலையே வேதம் அத்விதீயம்’ (அத்துவிதம்) என்று கூறுகின்றது. இதன் உண்மைப் பொருள் சித்தாந்தத்தில்தான் விளங்கு கின்றது. "இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும், உயிர்க்கு உயிராதல் தன்மை யால் உடனாயும் நின்று உலகத்தைச் செயற்படுத்துகின்றான்” என்பது சிந்தாந்தம் தரும் விளக்கம். T இஞா.போ. 3 فليج சூத்திரம். முதல் அதிகரணம் - வார்த்திகம் (7-8) - சிற்றுரை காண்க.