பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 57 விரி-விளக்கம்: இறைவனும் உலகமும் ஒன்றி நிற்கும் கலப்பினை நோக்குங்கால் இரண்டும் ஒன்றே எனக் கூறுமாறு அபேதமாய் நிற்கின்றான். பொருள் தன்மையை நோக்குங் கால் இறைவன் தன்மை வேறு உலகின் தன்மை வேறு என்று காணப்படுவதால் பேதமாய் நிற்பது தெரிகிறது. உலகத்தை இறைவன் தொழில்படுத்தலேயன்றி, அதன்பொருட்டுத் தானும் உடன் தொழிற்பட்டு நின்றும், உலகம் போலத் தான் விகாரம் அடையாது நிற்றலை நோக்குங்கால் அபேதமாய்இருந்தே பேதமாகின்ற பேதாபேதம் என்ற நிலையைக் காணமுடி கின்றது. அவ்வாறு அபேதம், பேதம், பேதாபேதம் என மூன்றற்கும் பொதுவாய் நிற்கும் அத்துவித நிலையை மெய்கண்டார் அவையே தானேயாய்' என்ற ஒரு சிறு தொடரால் மின் கை விளக்கொளியைக் காட்டுவார். மாணாக்கரின் விளக்கம்: மெய்கண்டாரின் மின் கை விளக்கொளியை அவர்தம் மாணாக்கர்கள் விரித்து விளக்கியுள்ளனர். அருணந்தி சிவாச்சாரியார் "உலகெலா மாகி வேறாய் உடனுமாகி” என்று விளக்கினார். உமாபதி சிவமோ “பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள் ஒளிபோல் பேதமும் இன்றி... உடல்-உயிர், கண்அருக்கன், அறிவு-ஒளிபோல் பிரிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய்” எனப் பிறமதங்களையும் எடுத்துக்காட்டி மறுத்தும் சித்தாந்தத்தை உவமை முகத்தால் இனிது விளக் கினார். இவர்களுள் அருணந்தி வாக்கினால் மெய்கண்டாரது “அவையே தானேயாய்” என்ற தொடர் "அவையேயாய் தானேயாய், அவையே தாணேயாய்” என இரட்டுறமொழி தலாய் நின்று "முதல்வன் கலப்பினால் உலகத்தோடு ஒன்றே யாயும் பொருள் தன்மையால் வேறேயாயும், உயிர்க்கு T3 கி.ஞா.போ. சூத் - 2 33. சித்தியார் . 2.1