பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் உயிராதல் தன்மையால் உலகத்தோடு உடனாயும் நிற்பன்" என்ற பேரொளியைப் பெற்று விளக்கம் அடைகின்றது. உமாபதி சிவத்தின் வாக்கினால் 'முதல்வன் உலகத்தோடு பொன்னும் மணியும்போல் அபேதமும் ஆகாமல், இருளும் ஒளியும் போலப் பேதமும் ஆகாமல், சொல்லும் பொருளும் போலப் பேதா பேதமும் ஆகாமல் கலப்பினால் உடலின் உயிர்போல ஒன்றாயும், பொருள் தன்மையால் கண்ணில் அருக்கன் (சூரியன்) போல வேறாயும், உயிர்க்கு உயிராதல் தன்மையால் கண்ணொளியும் ஆன்ம போதமும் போல உடனாயும் நிற்பன் என்று விளக்கம் பெறுகின்றது. இவ்வாறு அபேதம், பேதம், பேதாபேதம் என்ற மூன்றற்கும் பொது வாய் நிற்கும் நிலையே அத்துவிதமாகும் என்பது தெளிவா கின்றதல்லவா? இவற்றையெல்லாம் இவ்வாறே கண்டு சிவ ஞானபோத மாபாடிய ஆசிரியர் தம் பேருரையில் ஆங்காங்கு இனிது விளக்கியுள்ளார். »34 & - அத்துவிதம்-சொற்பொருள் விளக்கம்." அத்து விதம்' என்ற சொல் அ+துவிதம் என்று பிரியும் இதில் 'அ' என்னும் நகாரம் அன்மை, இன்மை, மறுதலை என்னும் மூன்று பொருள்களைத் தரும். அப்பிராமணன்' என்பதில் நகாரம் அன்மைப்பொருள் தந்தது. பிராமணனாய் இருந்தும் பிராம ணன் அல்லனாயினான் எனப் பொருள் தருவது. அப்பிரகா சம்’ என்பதில் நகாரம் இன்மைப் பொருள் தந்தது. இங்குப் 'பிரகாசம் இல்லை எனப் பொருள் தருவது. அதர்மம் என்ற சொல்லில் நகாரம் மறுதலைப் பொருள் தந்தது தருமத்தான் மறுதலையாய் பாவம்' எனப் பொருள் தருவது. இம்மூன்று பொருள்களில் அத்துவிதம் என்ற நகாரத்திற்கு இன்மைப் பொருளும் மறுதலைப் பொருளும் கொண்டு ஒன்று எனப் 34. சி.ஞா.போ. 2ஆம் சூத். அதிகரணம் வார்த்திகம் 7(b) (சிற்றுரை)