பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) 59 பிறரெல்லாம் பொருள் கூறுவர். ஆயினும் எண்ணுப் பெயர் மேல் வரும் நகாரம் அன்மைப் பொருளையன்றி வேறு பொருள் தராது." இது அநேகம் என்ற சொல்லால் தெளி வாகும். அநேகம் என்பது ஒன்றல்ல எனப் பொருள் தரு கின்றது. அதனால் துவிதம் என்னும் எண்ணுப் பெயர்மேல் வந்த நகாரமும் அத்துவிதம் என்பது இரண்டாய் இருந்தே இரண்டல்லவாய் நிற்கும் எனப் பொருள் தரும் -இந்த விளக்கத்தைச் சிந்தித்துத் தெளிவு பெறலாம். இங்ங்ணம் அத்துவிதம் என்ற சொல்லுக்கு உண்மைப் பொருள் கண்டவர் மெய்கண்டார். இங்ங்னம் சுத்தாத்துவத் தின், மெய்யைக் கண்டு இனிது விளக்கினமைபற்றியே மெய்கண்டார் மெய்கண்டார். ஆனார் என்பதைத் தாயுமான் அடிகள், பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவிதம் மெய்கண்ட நாதன் மேவுநாள் எந்நாளோ?" 35. இவ்விடத்தில் இன்மைக்கும் அன்மைக்கும் உள்ள வேறுபாட்டை அறிதல் வேண்டும். இன்மை முற்றிலும் மறுப்பது, அன்மை சிறிது மறுத்துச் சிறிது உடன்படுவது; எ-டு 'சாத்தன் இல்லை என்றால் அங்கு அவனோடு ஒத்த வேறொருவன் உளன் என்னும் பொருள் எவ்வாற்றானும் தோன்றாது. ஆனால், சாத்தன் அல்லன்” என்றால் "அவனோடு ஒருவாற்றான் ஒத்த வேறொருவன் உளன்’ என்ற பொருள் தோன்றும். அது போலவே 'இரண்டும் இல்லை என்றால் அங்கு இரண்டு என்பதற்கு ஒத்த பொருள் உண்டு என்பது எவ்வாற்றானும் பெறப்படாது. ஆனால் இரண்டு அல்ல' என்றால் அங்கு ஒருவாற்றான் இரண்டு என்பதற்கு ஒத்த பொருள் உண்டு என்பது பெறப்படும். இதுவே இன்மைக்கும் அன்மைக்கும் உள்ள வேறுபாடாகும் என்பது அறிந்து தெளியப்படும். 36. தா.பா. எந்நாட்கண்ணி - 4 குருமரபின் வணக்கம்) இங்கு 'புனிதமெனும் அத்துவிதம் என்பது சுத்தாத்துவிதம் ஆகும்.