பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பிறத்தல் புரியும் உயிர்களோடு ஒன்றாந்தன்மை, வேறாந் தன்மை, உடனாந்தன்மை ஆகிய மூன்று தன்மைகளும் ஒருங்கிருத்தல் கூடும். இம்மூன்று தன்மைகளின் சேர்க்கையே அத்துவிதத்தன்மை எனப்படும். இத்தன்மையோடு கூடி நின்றே இறைவன் அவ்வுயிர்கள் இறத்தல் பிறத்தல் புரிதற் பொருட்டு உபகரிக்கின்றான் என்பதைத் தெளியலாம். இத்தன்மையை உணர்த்தவே முதல்வன் அவையேயாய், தாணேயாய், அவையே தானேயாய் நிற்கும் என்று கூறினார் மெய்கண்டார். இந்தச் சுத்தாத்துவிதத் தன்மை யையே திருமுறைகளும் பேசுகின்றன. இங்ங்ணம் முத்தொழில்களையும் சித்தாய், அதிலும் சூக்கும் சித்தாய் நிற்கும் இறைவனே ஏனைய எல்லாப் பொருட்கும் பரம ஆதாரமாய் நிற்றலன்றி, அவனுக்கு ஓர் ஆதாரம் வேண்டாமையும் பெறப்படும். இதனால் 'குயவன் என்ற உபமானம் பற்றி குயவனுக்கு ஆதாரம் இருத்தல் போல, இறைவனுக்கும் ஓர் ஆதாரம் உண்டோ? என்னும் ஐயத்திற்கு இடம் இல்லை. இதனை அருணந்தி சிவம், ஞாலம் எழிசையும் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும் காலமே போலக் கொள்நீ நிலைசெயல் கடவுட் கண்ணே" என்று விளக்குவர். அஃதாவது, "எல்லாப் பொருள்களையும், ஆக்கியும், வளர்த்தும், அழித்தும் நிற்கும் கால தத்துவம், தனக்கு ஓர் ஆதாரம் இன்றி நின்றே அவற்றைச் செய்தல் போல, இறைவனும் ஆதாரம் இன்றி நின்றே தன் செயலைச் செய்வன்” என்பதாகும். இதனால் "குடம் முதலிய செயப்படு பொருள்கட்குக் கர்த்தாவாகிய குயவன் அவற்றின் வேறாய் 43.