பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) - 69 அவன் விரும்பிச் செய்வதுமில்லை. ஆருயிர்களின் பிறப்பை நீக்கித் தன்னை அடையச் செய்வதே அவனது விருப்பம். ஆயினும் இக்கூறிய பலவகைக் காரணங்களால் படைப்பு முதலிய தொழில்களைப் பலபடச் செய்கின்றான். இவை யனைத்தும் உயிர்களின் பக்குவ வேறுபாடுகளை நோக்கிச் செய்வதல்லது தன் தன்மையால் செய்வதில்லை. அனைத்தும் ஆருயிர்களின் வினையின் காரணமாகவே நடைபெறு கின்றன. வினை தோன்றுவதற்குக் காரணம்: சைவ சித்தாந்தம் இதனைத் தெளிவாக விளக்குகிறது. இந்த விளக்கத்தை ஈண்டுக் காணலாம். செம்பு இயற்கையிலேயே களிம்பு என்ற குற்றத்தை உடையதாய் இருத்தல் போல ஆன்மா இயற்கை யிலேயே ஆணவம் என்ற ஒரு குற்றத்தை உடையதாய் உள்ளது. அக்குற்றம் காரணமாகவே வினை, மாயை' என்றும் குற்றங்கள் அதனை வந்து பற்றுகின்றன. உயிர்கள் உலகப் பொருள்களால் வரும் இன்ப துன்பங்களில் அழுந்துதல் அவற்றின் மேலுள்ள விருப்பு வெறுப்புகளே காரணமாகும். இவ்விருப்பு வெறுப்புகள் ஆணவமலத்தின் செயல்களாகும். உயிர்களால் விரும்பவும் வெறுக்கவும்படுகின்ற இன்பதுன்பங் களை விளைவிப்பது வினையாகிய கன்ம மலமாகும். ஆத லின் ஆணவ மலத்தால் விருப்பு வெறுப்புகளை உடையதாய் நிற்கும் உயிர் அவ்விருப்பு வெறுப்புகளுக்கு விடயமாகிய இன்பதுன்பங்களைத் தருகின்ற கன்ம மலத்தோடுதான் முதற்கண் தொடர்வதாகின்றது. இதனால் கன்மமே முதலில் ஆன்மாவைப் பற்றுகின்றது என்பது தெளிவு. இதனால் ஆணவத்தின் காரியம் கன்மமும், கன்மத்தின் காரியம் மாயையும் ஆதல் விளங்கும். கன்மம் ஆணவத்தின் காரியமேயன்றி மாயையின் காரியமன்று என்பதைத்