பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் திருவள்ளுவரும் இருள் சேர் இருவினை" என்று குறிப்பிடு வதையும் காணலாம். பரிமேலழகரும் “இன்னதன்மைத்தென ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள் என்றும், நல்வினையும் பிறத்தற்கேதுவாகவான் இருவினையும் சேராவென்றும் கூறினார்" என்றும் குறிப்பிடுவதனாலும் அறியலாம். மேலும் விளக்கம்: இன்பதுன்பங்களுக்கு விதை போல்வது கன்மமலம். அவ்விதை முளைத்து வேரூன்றி வளர்ந்து, மற்றும் பல விதைகளைத் தருதற்குச் சார்பாய் உள்ள நிலத்தின் ஆற்றல் போல்வது ஆணவமலம். அவ்வாற்றலை யுடைய நிலம் போல்வது ஆன்மா, விதையை முளைப்பித்து, நிலத்தின் ஆற்றலையும் வெளிப்படுத்தி முளையை நிலத் தோடு விளைவிக்கும் நீர் போல்வது மாயா மலம். முதலில் நிலமும் பின்னர் அதன் ஆற்றலும் வேண்டப்படும். அதன் பின் வேண்டப்படுவது விதை. இவையெல்லாம் அமைந்தபின் வேண்டப்பெறுவதே நீர். இவை போலவே "ஆன்மா, ஆணவம், கன்மம், மாயை' என்பவற்றையும் பொருத்திப் பார்த்து உண்மையைக் கண்டு தெளியலாம். இப்படித் தெளிந் தாலும், இவற்றின் செயற்பாடுகளுக்கு முன்பின் கூறுதல் அரி தாகும். இதனால்தான் சைவசித்தாந்தம் இவையனைத்தையும் 'அநாதி என்று கூறுகின்றது. - உயிர்கள் தோறும் ஆணவமலப் பிணைப்பும் ஒரு வகையாய் இராது அது பலவகையாயிருத்தலின் அவற்றின் விருப்பு வெறுப்புகளும் பலவகையாக இருக்கும் என்பது தெளிவு. ஆகவே, அவற்றிற்கேற்ப வரும் வினை வகைகளும் பல திறத்தனவாக இருக்கும். அவ்வகைகளுக்கேற்பவே உடம்புகளும் பலவகையாய் அமையும். இவையனைத்தையும் 45. குறள் - 5