பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 71 அறிந்து இறைவன் அவ்வவற்றிற் கேற்றவாறு கூட்டுவிக் கின்றான் என்பது அறிந்து தெளியப்படும். இவ்வாறு இறைவன் இருவகைப் பிரபஞ்சங்களையும் செயற்படுத்துகின்றான் என்பது ஒர்ந்து அறியப்படும். (8) இறைவனின் உருவங்கள் இைைவன் உலகத்தைச் செயற்படுத்துங்கால் உரு வத்தையுடையவனாய் நின்றுதான் செயற்படுத்துகின்றான். உருவம் இல்லாத உயிர் உடலை இயக்கச் செயற்படுத்துவது போல், உலகிற்கு உயிராய் நிற்கும் இறைவன் உருவம் இன் றியே செயற்படுத்தக் கூடுமாயினும், உலகத்தின் செயற்பாடு உயிர்கட்குப் பயன்படுதற் பொருட்டே இறைவன் உருவமுடை யவன் ஆகின்றான். சில எடுத்துக்காட்டுகள் இதனைத் தெளிவுபடுத்தும். எடுத்துக்காட்டுகள்: ஆனைமுகக் கடவுள், முருகக் கடவுள் போன்றாரை இறைவன் உருவமின்றியே தருதல் கூடுமாயினும் அவர்கள் இறைவனின் திருக்குமாரர்கள் என நின்று அவர்தம் அறக்கருணைக்கும் மறக்கருணைக்கும் உரியராயினார் என்பதை உணர்ந்து அப்பயனைப் பெறுதல் கூடாமையின் அன்னோரை இறைவன் உருவங் கொள்ளச் செய்துள்ளான். கொடிய பன்றியைக் கொன்று அர்ச்சுனனைக் காத்துப் பாசுபதம் கொடுத்து உருவத்துடன் நின்றுதான் செய்தான். உருவமின்றிச் செய்யின் பார்த்தன் அதனைத் தெளிந்து பயன் கொள்ளுதல் இயலாது. கல்லாலின் கீழிருந்து சனகாதி முனிவர் நால்வர்க்கும் மெய்யுணர்வைத் தரும்போது உருவம் இன்றியமையாதது என்பதைச் சொல்ல வேண்டா. வாதவூரடிகட்குக் குருவடிவமாக இருந்து உபதேசித்ததும் ஈண்டு நினைத்தல் தகும். ஆகவே, பயன்பெறுதற்கு உரியார்