பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் பயன் பெறுதற் பொருட்டே இறைவன் உருவங்கொண்டு செய்வான் என்பது தெளிவாகின்றதன்றோ? இன்னோர் உண்மை. பிறவிக் கடலில் வீழாத பெருமை யுடையவனாகிய இறைவன் பிறவிக் கடலில் வீழ்ந்த உயிர்கட் கெல்லாம் உடம்புகளைத் தருபவனாதலின், அவன் தனக்கு வேண்டும் உடம்பினைத் தானே தன் இச்சையால் கொள்வன் என்பதை அறிய வேண்டும்." மேலும் மலமுடைய உயிர்கள் கொள்ளும் உருவத்திற்கு உரிய குற்றங்கள் யாவும் இறைவன் கொள்ளும் உருவத்திற்கு இல்லை. இறைவன் மல மற்றவனாதலின் மனத்தின் தொடர்பு அவனுக்கு உண்டாதல் இல்லை. அவனுக்கு அவனது சக்தியாகிய அருளே உருவமாய் அமைதலால் அவன் கொள்ளும் திருமேனிகள் யாவும் அருட்டிருமேனிகளாகும் என்பதைத் தெளியலாம். அன்றியும், அவன் உருவத்துடன் நின்று ஐந்தொழில்களை ஆற்றும்போது நம்மைப்போல் கருவிகரணங்களைக் கொண்டு செய்யாமல் சங்கற்ப நினைவு)மாத்திரத்தால் செய்தலால், நமக்கு வரும் இளைப்பு, களைப்பு, விருப்பு வெறுப்பு, இன்பம், துன்பம் வேறுபாடுகள் அவனை அடைய மாட்டா. இதனை மெய்கண்டார், நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில் தாக்காது நின்றுளத்தில் கண்டிறைவன்- ஆக்காதே கண்ட நனவுணர்விற் கண்ட கனவுணரக் கண்டவனில் இற்றிட்டான் கட்கு" - (தாக்காது-விகாரப்படாது; ஆக்குதல்-படைத்தல்; காண் 46. வைணவத்தில் திருமால் அவதாரங்கள் எடுப்பதும் தன் இச்சைப்படியேயாகும். இங்கும் ஆருயிர்களைக் காப்பதுவே 47. சி.ஞா.போ.சூத் அதி 2. பாட்டு 4 (சிற்றுரை)