பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 73 டல்-படைத்தல்; நொடித்தல்-அழித்தல் (நொடித்தான் மலை-தேவா. 7-100 காண்க) - என்று விளக்குவர். இறைவனுக்கு உருவம் உண்டு என்போரும் உருவம் இல்லை என்போரும் உளர். இறைவனுக்கு உருவம் இல்லை’ என்று கூறுவது அவனது சொரூப நிலையை நோக்கியே யாகும். அவனுக்குப் பலவகையான உருவங்கள் உண்டு’ என்று நூல்களில் நுவலப் பெறுவது அவனது தடத்த நிலையை நோக்கியே யாகும். - ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க் காயிரம் . திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ?? என்ற மணிவாசகப் பெருமானின் திருவாக்கில் முற்பாதி சொரூப நிலையையும் பிற்பாதி தடத்த நிலையையும் குறிப்பிட்டிருப்பதை நுனித்து அறிந்து தெளியலாம். தடத்த நிலையில் இைைவன் வேண்டிய வடிவத்தை வேண்டியவாறு கொள்வான். இங்ங்ணம் கொள்வது அவனது சக்தியாலே என்பது அறியத்தக்கது. நாயகன் எல்லா ஞானத் தொழில்முதல் நண்ண லாலே காயமோ மாயை யன்று; காண்பது சக்தி தன்னால்' என்பது சிவஞான சித்தியார். சக்தி என்பது இறைவனது திருவருள். ஆகவே, இறைவனது திருமேனியும், அவற்றில் அமைந்த படைக்கலம், ஆடை அணிகலம் முதலியனவும், அவன் எழுந்தருளியிருக்கும் இடமும், அவற்றைக் கொண்டு 48. திருவா. திருத்தெள்ளேனம் 1 49. சித்தியார் 1.4